உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 3வது முறையாக அதிபர் ஆவதை தடுக்கும் அமெரிக்க சட்டம் மோசமானது; டிரம்ப் காட்டம்

3வது முறையாக அதிபர் ஆவதை தடுக்கும் அமெரிக்க சட்டம் மோசமானது; டிரம்ப் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 3வது முறையாக நான் அமெரிக்க அதிபர் ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என்று அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.79 வயது நிறைந்த டிரம்ப், மீண்டும் ஒருமுறை (3வது முறை) அதிபராக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அவர் அதை மிகவும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தத்தின்படி யாரும் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்று தெளிவாக கூறுகிறது. அதாவது ஒருவரை இரண்டு முறைக்கு மேல் அதிபராக தேர்வு செய்ய முடியாது. இந் நிலையில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியா செல்கிறார். அங்கு செல்லும் முன்பாக தமது விமானத்தில் நிருபர்களிடம் பேசும் போது, அதிபராக மீண்டும் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் அளித்த பதில் வருமாறு; நான் உண்மையில் அதை பற்றி யோசிக்கவே இல்லை. இதுவரை நான் பெற்ற ஓட்டு சதவீதத்தில் இப்போது அதிக ஓட்டு சதவீதம் பெற்றிருக்கிறேன். எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.அமெரிக்காவின் சட்டம் 3வது முறையாக ஒருவர் அதிபராக போட்டியிடுவதை தடை செய்கிறது. இது மிகவும் மோசமானது என்று கூறினார்.கடந்த வாரம் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பான்சன், பேட்டி ஒன்றில் டிரம்பை 3வது முறையாக அதிபராக பதவியேற்க செய்யும் திட்டம் உள்ளது என்று கூறியிருந்தார். அதே சமயத்தில், சபாநாயகர் மைக் ஜான்சன், அரசியலமைப்பை திருத்த தனக்கு எந்த வழியும் தெரியவில்லை. அதை திருத்தம் செய்ய எப்படியும் 10 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சாமானியன்
அக் 29, 2025 22:33

அமெரிக்க மக்கள் ரொம்ப பாவம். பதவி இறங்கும் முன் உலகமகா ஜோக்கர் என்ற பட்டத்தோடு நோபல் பரிசை வழங்கிடுங்க.


PR Makudeswaran
அக் 29, 2025 20:41

மூன்றடி இடம் கேட்டார் வாமனன் திரிவிக்ரமன். டிரம்ப் மூன்றாவது முறை பதவிக்கு ஆசைப் படுகிறார். நம்ம ஊர் மு க வை போல.


M. PALANIAPPAN, KERALA
அக் 29, 2025 16:04

போதுமடா சாமீ, அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே தாங்காது


Vasan
அக் 29, 2025 15:37

Why not Trump appoint his son as Deputy President?


Senthoora
அக் 29, 2025 14:33

நமது பக்துநாடு இலங்கை முன்னாள் அதிபர் மூன்றாவது முறையாக அதிபராக முயன்று இன்று கவிழ்ந்து குடும்பமே சிறைக்குபோகும் அளவுக்கு வந்திருக்கு, டிரம்ப் ஐயாவுக்கு என்ன ஆவூதோ தெரியல.


Balasubramanian
அக் 29, 2025 13:58

இந்தியாவில் மூன்றாவது தலைமுறை பரம்பரை ஆட்சிக்கு வழி கோலுகிறார்கள் - இவர் பாவம் மூன்றாவது முறை கோருகிறார்! நமக்கென்ன? எல்லாம் அமெரிக்கர்கள் பாடு! இவரது இரண்டாவது ஆட்சியைத் தாக்குப் பிடிக்க முடிந்தால்!


Gnana Subramani
அக் 29, 2025 13:27

இங்கேயும் ஒரே ஆள் மூன்றாவது முறை ஆட்சி செய்து இருந்தால் நாடு நன்றாக இருந்து இருக்கும்


Abdul Rahim
அக் 29, 2025 13:09

இப்பவே காமெடி அதிபர்னு பெயர் வாங்கியாச்சு இனி 3வது முறையாக வந்து ...னு பெயர் வாங்க ஆசைபோல...


r ravichandran
அக் 29, 2025 12:46

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தொடர்ந்து இன்று டிரம்ப் வரை இரண்டு முறை தான் அதிபராக இருந்தார்கள், இருக்க முடியும். ஆனால் விதி விலக்காக 3 முறை தொடர்ந்தும், 4 வது முறை வெற்றி பெற்று பதவி ஏற்ற ஒரு சில மாதங்களில் இறந்து போனவர் பிராங்க்ளின் டீ ரூஸ்வெல்ட். முதல் உலக போரின் போது திவால் ஆன அமெரிக்காவை மீட்டு கொண்டு வந்தவர்.


Anand
அக் 29, 2025 12:37

கவலை வேண்டாம், உன்னோட இரண்டாவது முயற்சிலேயே அமெரிக்காவை அழித்துவிட முடியும்.


முக்கிய வீடியோ