உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / என் தலைமுடி இல்லாத மோசமான போட்டோ; பிரபல பத்திரிகையை விளாசிய டிரம்ப்

என் தலைமுடி இல்லாத மோசமான போட்டோ; பிரபல பத்திரிகையை விளாசிய டிரம்ப்

வாஷிங்டன்: தலைமுடி இல்லாத தனது போட்டோவை வெளியிட்டு விட்டதாக டைம் பத்திரிகையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டித்துள்ளார்.புகழ்பெற்ற டைம் பத்திரிகை டிரம்ப் பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், எகிப்து உச்சி மாநாடு மற்றும் மத்திய கிழக்கில் பெற்ற வெற்றி டிரம்பின் 2வது பதவி காலத்தில் நிகழ்த்திய சாதனை என்று அந்த கட்டுரையில் பாராட்டி எழுதி இருக்கிறது.பத்திரிகையின் அட்டை படத்தில் தலைமுடி அதிகம் இல்லாத அவரது புகைப்படத்தை வெளியிட்டு, காசா போரில் டிரம்பின் செயல்பாட்டை பாராட்டி எழுதி இருக்கிறது.பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவரது போட்டோ தற்போது பெரும் விமர்சனங்களுக்கு இலக்காகி உள்ளது. தலைமுடி இல்லாத போட்டோவை டைம் பத்திரிகை வெளியிட்டு உள்ளதே இதற்கு காரணம். பாராட்டுகள் கூறி இருந்தாலும், மிக மோசமான போட்டோ என்று கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் டிரம்ப்.இதுகுறித்து அவர் தமது சோஷியல் ட்ரூத் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது; டைம் பத்திரிகை என்னைப் பற்றி ஒப்பீட்டளவில் நல்ல கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் கட்டுரைக்காக வெளியிட்டுள்ள அட்டை படம் மிகவும் மோசமானதாக இருக்கிறது. என் தலைமுடியை அவர்கள்(டைம் பத்திரிகை) மறைத்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள்? இவ்வாறு டிரம்ப் தமது அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார்.டிரம்புக்கும், டைம் பத்திரிகைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். அதனுடன் அவர் இப்படி மோதுவது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை எலான் மஸ்க் உடன் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை டைம் பத்திரிகை வெளியிட்டு இருந்தது. அதை சுட்டிக்காட்டி, டைம் பத்திரிகை இன்னமும் வெளியாகிக் கொண்டு இருக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Vijay D Ratnam
அக் 15, 2025 18:34

அவனவன் 40 வயசுலயே வழுக்கையோட திரியும் போது, 80 வயசு டிரம்புக்கு முடிதான் பிரச்சினையா. வழுக்கை மண்டையர்களுக்கு விக்கே துணை. நம்ம தத்தி எப்படி விதவிதமா விக்கோடு திரிகிறார்.ஆனால் ஜெயக்குமார்தான் கெத்து. ஆமா எனக்கு மண்டைல முடி இல்ல, இப்போ அதுக்கு என்ன என்று அசால்ட்டா வருக்கிறார்–ல.


SRIRAM
அக் 15, 2025 13:38

மண்டையில் மூளை இல்லாதது பற்றி கவலை இல்லை முடியை பற்றி கவலை


வல்லவன்
அக் 15, 2025 12:08

இவர் ஒரு அமெரிக்க விஜய்காந்த்


சங்கி
அக் 15, 2025 14:33

விஜயகாந்தை பற்றி உமக்கு என்ன தெரியும். உமக்கு தெரிந்ததெல்லாம் 200 ரூபா ஊபிஸ். கொஞ்சமாவது மனசாட்சியுடன் கருத்து போடவும்.


M Ramachandran
அக் 15, 2025 11:10

வஞ்சக புகழ்ச்சி என் பார்கலே இது தானோ?


M Ramachandran
அக் 15, 2025 11:09

நம்ம விடியல் போலவே மிரட்டல் தொனி.


ஆரூர் ரங்
அக் 15, 2025 11:03

தமிழக அப்பா கிட்ட கத்துக்குங்க


KRISHNAN R
அக் 15, 2025 10:29

வெளிய முடி.. உள்ளே


சுந்தர்
அக் 15, 2025 09:50

இப்ப இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் காத்துல பறக்குது...


Ramesh
அக் 15, 2025 09:45

தலைமை பண்பு இல்லாதவனுக்கு தலை முடி தான் முக்கியம்.


vee srikanth
அக் 15, 2025 09:25

தலை கேசம், முகப்பூச்சு எப்படி செய்யணும்னு சொல்லுவாங்க


புதிய வீடியோ