உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நெருக்கடியில் டிரம்ப்: விமானத்தை விற்றார்

நெருக்கடியில் டிரம்ப்: விமானத்தை விற்றார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நிதி நெருக்கடியால் தனக்கு பிடித்தமான விமானத்தை விற்பனை செய்துள்ளார். அந்த விமானத்தின் மதிப்பு ரூ. 83 கோடியாகும்.அமெரிக்க அதிபராக உள்ள பைடனின் பதவிக்காலம் இந்தாண்டு இறுதியில் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த நடக்கவுள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சில மோசடி வழக்குகளில் டிரம்ப்க்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவர் தன்னுடைய தனி விமானம் ஒன்றை ஈரானிய - அமெரிக்க கட்டுமான நிறுவன தலைவர் மெஹர்தாத் மொயதியிடம் விற்பனை செய்துள்ளார்.இந்த விமானத்தை 1997 ஆண்டில் டிரம்ப் வாங்கினார். இது மணிக்கு 1136 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் மிக்கது. வானில் 51 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இந்த விமானத்தில் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vathsan
மே 29, 2024 21:00

ஒருவர் தன் சொத்தில் வாங்கிய விமானத்தை விற்கிறார். இன்னொருவர் ஊரார் சொத்தில் விமானம் வாங்கி ஹாயாக ஊர் சுற்றுகிறார்.


ராமகிருஷ்ணன்
மே 29, 2024 13:29

இந்த மாதிரியான சீப்பா வரும் விமானங்களை வாங்க திமுக கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள் இங்க இருப்பது டிரம்பு க்கு தெரியல்ல. இன்னும் நல்ல விலைக்கு வித்து ருக்கலாம்


Anantharaman Srinivasan
மே 29, 2024 13:11

நம்ப ஆளாயிருந்தா விக்காமலேயே வேறு வழியில் பணம் திரட்டியிருப்பார்..


Raa
மே 29, 2024 15:06

நீங்கள் சொல்வது I N D I A கூட்டணி தலைவர்களைத்தானே? உண்மைதான்


இளந்திரையன் வேலந்தாவளம்
மே 29, 2024 09:58

விமானம் வாங்கி 25 வருடம் ஆகிறது அதனால் விற்றிருப்பார்... Trump கு நிதி நெருக்கடி நம்பர மாதிரியா இருக்கு... அவர் ஒரு silver spoon born baby....


Raa
மே 29, 2024 15:08

"குந்தித் தின்றால் குன்றும் மாயும்" என்ற பழமொழி கேள்விப்பட்டதில்லையா?


Senthil Prabak
மே 29, 2024 08:10

அவர் வைத்துள்ள விமானம் போயீங் 757 மதிப்ப 830கோடி இருக்கும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி