வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ranga rajan Relations, God bless the world. All The best Trumpji
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.அமெரிக்காவில், கடந்த நவ., 5ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், 78, வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் ஜனநாயக கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் தோற்கடித்தார். இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள 'கேபிடோல்' எனப்படும், அமெரிக்க பார்லி.,யின் உள்ளரங்கில் நடக்கும் விழாவில், அமெரிக்காவின் 47வது அதிபராக, டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.அமெரிக்க சட்டப்படி, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வேன்ஸ், முதலில் பதவியேற்பார். அவரை தொடர்ந்து, அதிபராக டிரம்ப் பதவியேற்பார். அமெரிக்காவில் கடுங்குளிர் நிலவுவதால், 40 ஆண்டுகளுக்கு பின், பதவியேற்பு விழா முதன்முறையாக பார்லி., உள்ளே நடக்கிறது. இந்த பதவியேற்பு விழாவில், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன், துணை அதிபர் பதவியில் இருந்து விலகும் கமலா ஹாரிஸ், உலகப் பணக்காரர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பர்க் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானியும் பங்கேற்கிறார். நம் நாட்டின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில், அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்; ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை ஏற்காத டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க பார்லி.,க்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பின், அதே பார்லி.,யில் அதிபராக டிரம்ப் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ranga rajan Relations, God bless the world. All The best Trumpji