உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பைடனை சந்தித்தார் டிரம்ப்: ஓவல் அலுவலகத்தில் விருந்து

பைடனை சந்தித்தார் டிரம்ப்: ஓவல் அலுவலகத்தில் விருந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அதிபர் பைடனை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bqzilwd1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஓவல் அலுவலகம் வந்த டிரம்ப்பை வரவேற்று பேசிய ஜோ பைடன், அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் எனவும், அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சீராக முடியுமோ அவ்வளவு சீராக இருக்கும் என்றார்.சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: டிரம்ப், பைடனின் தேர்தலுக்கு பிந்தைய சந்திப்பு வெளியேறும் அதிபருக்கும், புதிதாக வரவிருக்கும் அதிபருக்கும் இடையே நடக்கும் வழக்கமான நடவடிக்கை. அமெரிக்காவின் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் தொடக்கமாக குறிப்பிடப்படுகிறது.இவ்வாறு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.2020 ல் நடந்த அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்ற போது, அதனை டிரம்ப் ஏற்கவில்லை. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
நவ 14, 2024 08:51

கைகளின் பின்னணியில் நெருப்பு பற்றியெரிவதை புகைப்படம் காட்டுகிறது ...... Hot handshake என்று சொல்ல வசதியாக ....


Kasimani Baskaran
நவ 14, 2024 05:37

சிறப்பு. இந்திய - அமெரிக்க உறவு புதிய சகாப்தம் படைக்கும் என்று நம்புவோமாக.


Sivabalan Balan
நவ 14, 2024 00:33

பச்சிளம்


சமீபத்திய செய்தி