இந்தியாவுக்கு 100 சதவீத வரி ஐரோப்பாவுக்கு டிரம்ப் அழுத்தம்
இந்தியாவுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் சார்பிலும், 100 சதவீத வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழுத்தம் தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான தாக்குதலை கடந்த சில நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இது விரக்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் மூத்த அதிகாரிகள் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்தனர். அவர்களிடம் டிரம்ப், 'இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு நீங்கள் 100 சதவீத வரி விதிக்க வேண்டும்' என்ற அசாதாரண கோரிக்கை வைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.