உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக மீட்க டிரம்ப் வேண்டுகோள்: உறுதிபடுத்திய எலான் மஸ்க்

சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக மீட்க டிரம்ப் வேண்டுகோள்: உறுதிபடுத்திய எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: விண்வெளியில் தங்கியுள்ள நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று எலான் மஸ்க் உறுதிபடுத்தியுள்ளார்.விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் ஏழு மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்,என் உடல் கொஞ்சம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதே எடையைக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் ஜூன் 2024 முதல் ஏழு மாதங்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் மார்ச் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ-10 விண்கலத்தில் திரும்ப உள்ளனர்.இருவரையும் பத்திரமாக அழைத்து வாருங்கள் என்று அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசு அவர்களை கைவிட்டுவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.இவ்வாறு எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜன 29, 2025 17:34

டிரம்ப்??? என்ன இப்படி வேண்டுகோள்??? நாசாவால் இது முடியாது என்று முடிவு பண்ணி விட்டீர்களா என்ன


SANKAR
ஜன 29, 2025 20:35

yes ...that is the truth.only Musk can do but he was insulted and ignored by Biden as he was close associate of Trump


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை