உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசு அதிகாரத்தில் எலான் மஸ்க்கிற்கு கட்டுப்பாடு விதித்தார் டிரம்ப்

அரசு அதிகாரத்தில் எலான் மஸ்க்கிற்கு கட்டுப்பாடு விதித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' ஊழியர்களை பதவியில் அமர்த்துவது மற்றும் நீக்குவது குறித்து அரசு துறை தலைவர்கள் தான் முடிவெடுப்பார்கள். எலான் மஸ்க் எடுக்க முடியாது,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அரசின் செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தம், அரசின் பல துறைகளில் பணியாற்றியவர்களை பணி நீக்கம் உள்ளிட்டவற்றில் எலான் மஸ்க்கிற்கு பங்கு உண்டு. இதற்கு அமெரிக்காவில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. அரசின் ரகசிய தகவல்கள் எப்படி தனியார் நிறுவனத்தின் தொழிலதிபரான எலான் மஸ்க்கிற்கு கொடுக்கலாம் என வழக்கும் தொடுக்கப்பட்டது.இந்நிலையில், அமெரிக்க அமைச்சரவை கூட்டம் டிரம்ப் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எலான் மஸ்க்கும் கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் டிரம்ப் கூறியதாக வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பணியில் இருந்து ஊழியர்களை நீக்கவும், சேர்க்கவும் எலான் மஸ்க் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.இதன் பிறகு ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: உங்களுக்கு தேவையான, விரும்பும் ஊழியர்களை துறைகள் வைத்துக் கொள்ளலாம். இதனை நாங்களும், எலான் மஸ்க்கும் கண்காணிப்போம். அவர்கள் சிறந்த முறையில் ஊழியர்களை குறைக்கலாம். அப்படி அவர்கள் செய்யாவிட்டால், அதனை டிரம்ப் செய்வார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 10:04

ஒருவழியா கவுண்டமணி செந்திலை முதல் உதை உதைச்சுட்டார் .....


Kasimani Baskaran
மார் 08, 2025 07:45

முன்னரெல்லாம் அமெரிக்க அரசு உதவி பெரும் திட்டங்களுக்கு கண்காணிப்பு கடுமையாக இருக்கும். ஒரு ஒரு பைசாவும், நிமிடங்களும் கூட கணக்கில் கொள்ளப்படும். டைம் சீட் சரியாக கொடுக்கவில்லை என்றால் ஆயிரம் விசாரணைகள் உண்டு. ஆனால் பைடன் வந்தபின்னர் அனைத்தும் நாசம் செய்துவிட்டார். இப்பொழுதெல்லாம் என்ன வேலை செய்தீர்கள் என்று மஸ்க் கேள்வி கேட்டால் பலர் எதிர்க்கிறார்கள்.


Sankare Eswar
மார் 08, 2025 06:49

திராவிட தத்திகளா.... அரசு துறைகள் செலவை கட்டுப்படுத்துவது எப்படின்னு திரும்புகிட்டே கத்துக்குங்கடா ... அது சரி ... அப்புறம் எப்படி கொள்ளை அடிக்கிறது?


தாமரை மலர்கிறது
மார் 07, 2025 21:59

இனி அமெரிக்கா உருப்படாது. தேவை இல்லாத லட்சக்கணக்கான அரசு பதவிகள் அமெரிக்காவில் உள்ளது. அவற்றையெல்லாம் களைந்து, அரசு வரிப்பணத்தை சேமிக்கும் எலானீற்கு போடப்படும் கடிவாளம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு போடப்படும் கடிவாளம்.


முக்கிய வீடியோ