உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?

அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' அமெரிக்காவில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்த விரும்பவில்லை,'' என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.பிரிட்டன் இளவரசர் ஹாரி, மனைவி மேகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர், தனது சுயசரிதை புத்தகமான 'ஸ்பேர்' என்ற புத்தகத்தில், தான் பலவிதமான போதைப்பொருட்களை சோதித்துப் பார்த்ததாகக் கூறியிருந்தார். ஆனால், போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கும் பட்சத்தில் அவருக்கு அமெரிக்கா விசா கொடுத்திருக்க முடியாது. இதனையடுத்து, ஹரி, தனது விசா விண்ணப்பத்தில் தனது போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொய் கூறியுள்ளாரா என ' தி ஹெரிடேஜ் ' என்ற தொண்டு நிறுவனம் கேள்வி எழுப்பி இருந்தது. இது குறித்து அமெரிக்க அரசுக்கு எதிராக அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இதனிடையே, கடந்த காலங்களில் இந்த விவகாரத்தில் ஹாரியையும், அப்போது ஆட்சியில் இருந்த ஜோ பைடன் அரசையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். தற்போது அதிபராகி உள்ள டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி வருகிறார்.இந்நிலையில், இளவரசர் ஹாரி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பாக அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளதாவது: ஹாரியை நாடு கடத்த நான் விரும்பவில்லை. அவரை தனியாக விட்டு விடலாம். மனைவியுடன் அவருக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

jaya
பிப் 10, 2025 11:31

கூட இருப்பதால் இழுத்து வரப்பட்டவர், இப்போது மாட்டிக்கொண்டு முழிப்பவர்


Senthoora
பிப் 09, 2025 14:40

ராஜவாழ்க்கையே வேணாம் என்று வந்தவர், அவர் பாட்டுக்கு விட்டுவிடுவது நல்லது.


ஷாலினி
பிப் 09, 2025 11:41

இவரால், அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லை என டிரம்ப் நினைக்கிறார் போலும்


ஆனந்த்
பிப் 09, 2025 11:39

சட்டம் மக்களுக்கு தான். அரசர்களுக்கு அல்ல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை