உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹங்கேரியில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறேன்; டிரம்ப் அறிவிப்பு

ஹங்கேரியில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறேன்; டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ஹங்கேரியில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பு உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர உதவும்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: நான் இப்போது வரை 8 போர்களை நிறுத்தி வைத்துள்ளேன். இந்த எண்ணை 9வது ஆக மாற்ற விரும்புகிறேன். இரண்டு வாரங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார். ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினேன். உக்ரைன் உடனான போர் குறித்து நான் அவரிடம் ஆலோசனை நடத்தினேன். அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் சந்தித்து பேச்சு நடத்த உள்ளேன். அவரிடம் ரஷ்ய அதிபர் புடின் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து பேசுவேன். அவர்கள் இருவருக்கும் இடையே மோசமான உறவு உள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை கொண்டுவர முயற்சி செய்ததற்கு புடின் என்னை பாராட்டினார். உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களது பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும். ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான இந்த மோசமான போரை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா என்பதை ஆலோசிக்க, புடினும், நானும் ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட இடத்தில் சந்திப்போம். அப்போது முக்கிய முடிவு எடுப்போம். அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, ரஷ்யா உடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்துவோம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ashok
அக் 17, 2025 16:36

இவர் ஒரு காமெடி பீஸ்


Anand
அக் 17, 2025 10:40

இவர் ஒரு காமெடி பீசு.


Sun
அக் 17, 2025 09:09

அப்ப புடினுடன் ஏற்கெனவே பேசியது எல்லாம் வேஸ்ட்டா? எல்லா விசயங்களிலும் இவரு முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொள்வது, தன்னோட பெரியண்ணன் தனத்தை காண்பிப்பது இவைகள்தான் பாதிப் பிரச்சனைக்கு காரணமே !


SANKAR
அக் 17, 2025 09:47

Do you remember how many times WE talked with China after Galwan 2020 and that issue remains unresolved till date? Appo ellaam wastaa?!


djivagane
அக் 17, 2025 12:45

அமெரிக்கா ஆயுதம் உக்ரைனுக்கு கொடுப்பத நிறுத்தினால் போர் நின்றுவிடும்


Field Marshal
அக் 17, 2025 07:20

புனித போப் ரஷ்ய அதிபரை சந்தித்து அமைதியை வலியுறுத்தலாம் ட்ரம்ப் சண்டையை நிறுத்தினால் ஆயுதங்கள் தயாரிப்போரின் நிலமை என்னாகும் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை