உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புடினுடன் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை; டிரம்ப் திட்டவட்டம்

புடினுடன் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை; டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.உக்ரைன், ரஷ்ய நாடுகளின் போர் முற்று பெறுவதாக தெரியவில்லை. போரை முடிவுக்குக் கொண்டு வர எதிர்ப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்து இருந்தார். நேற்று இரவும் கூட உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர். போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.இந் நிலையில் புடினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற எண்ணம் புடினுக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவருடன் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவருடன்(புடின்) என்றுமே மிக சிறந்த உறவு உண்டு. ஆனால் இப்போது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.இவ்வாறு டிரம்ப் கூறினார்.முன்னதாக, புடாபெஸ்டில் புடினை,டிரம்ப் சந்திப்பார். போர் நிறுத்தம் பற்றி மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rajasekar Jayaraman
அக் 27, 2025 09:38

ஐயோ பாவம் மோடியை அழிக்கனினைத்து அசிங்கப்பட்டு உலகநாடுகளின் எதிப்பை சம்பாதித்தது தான் மிச்சம்.


Sun
அக் 26, 2025 23:05

நோபல் பரிசு எனக்கில்ல ,எனக்கில்ல வேற யாராச்சும் தட்டிட்டு போயிரப் போறார்! அய்யோ! அய்யோ! இப்புடி புலம்புற அளவுக்கு என்னைய விட்டுட்டானே!


arunachalam
அக் 26, 2025 18:07

ஹா ஹா ஹா வாருங்கள் இந்தாளை நினைத்து சிரிக்கலாம். சரியான ஜோக்கரை அமெரிக்க மக்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.


RAMESH KUMAR R V
அக் 26, 2025 17:31

உக்ரைன் போர் மோடிஜியால் தான் முடிவுக்கு வரும். ஜெய் ஹிந்த்.


பா மாதவன்
அக் 26, 2025 14:37

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தான் பெரிய ஜோக்கர் என்று நினைத்தால், அமெரிக்கா டிரம்ப் அவருடனும் போட்டி போட்டுக் கொண்டு அதைவிட நான் தான் பெரிய ஜோக்கர் ஆள் என்று தற்போது நிரூபித்து வருகிறார்.


Indian
அக் 26, 2025 13:19

ரஷ்யா , ஆக்கிரமிப்பு செய்வது தவறு ...


Dv Nanru
அக் 26, 2025 11:33

ஓ அவ்வளவு பிசியா புடின்னுடன் பேசுவதை விட அப்போ அந்த வேலையை பார்க்கவேண்டியதுதான் உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த உலகத்தில் மிக முக்கியமான மனிதர்கள் இரண்டு பேர் ஒன்னு பாரத பிரதமர் மோடி ஜி இன்னொருவர் புடின் ஜி அதையாறுமே மறுக்கமுடியாது ...


Field Marshal
அக் 26, 2025 11:53

இங்கே கண் துஞ்சாமல் மக்களை காப்பவரை மறப்பது நியாயமா


Saai Sundharamurthy AVK
அக் 26, 2025 11:30

பெகல்காம் தாக்குதலில் 26 ஹிந்து பெண்களின் கணவன்மார்கள் அவர்களின் மதத்தை கேட்டு கொல்லப் பட்டிருக்கிறார்கள். அந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் செயலுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத டிரம்ப் பாகிஸ்தானுடன் எந்த ஒரு கவலையில்லாமல் ஆசிம் முனிரை கூப்பிட்டு விருந்து வைத்து உறவு பாராட்டியது என்பது நிச்சயம் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு அவரது அலட்சியம் தெரிகிறது. பாகிஸ்தானுடன் வெளிப்படையான உறவு வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார். இதனால் தான் மோடி, டிரம்ப்பை சந்திக்க மறுத்திருக்கிறார். அவருடனான சந்திப்பை மோடி வெறுக்கிறார். இந்த அழகில் உக்கிரைன் போரை தூண்டி விட்டு, இப்போது வந்து ஜெலன்ஸ்கியை அடக்காமல் விருந்து வைத்து கொண்டாடி, உலக நாடுகள் மீது வரி விதிப்பு செய்து, போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்தால், ரஷ்யா இளிச்சவாயனா என்ன? டிரம்ப் முதலில் வரி விதிப்பை வாபஸ் பெற வேண்டும். பாகிஸ்தான், உக்கிரனை கை விட வேண்டும். இவைகளை செய்யாமல் அவரால் எந்த சாதனையையும் செய்ய முடியாது.


duruvasar
அக் 26, 2025 11:00

யாரும் தங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை. சமீபத்தில் ஈஜிப்பிட்டில் 20 நாட்டு தலைவர்களை கூப்பிட்டு கோலாட்டம் போட்டது அனைவர்க்கும் தெரியும்.


Ramesh Sargam
அக் 26, 2025 10:06

ஆம், அவருக்கு அடுத்து இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யா மீது எவ்வளவு வரிவிதிக்கவேண்டும் என்று கணக்குப்போட நேரம் வேண்டும்.


புதிய வீடியோ