நைஜீரியா மீது தாக்குதல் நடத்துவேன்; டிரம்ப் எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்; கிறிஸ்தவர்கள் படுகொலையை நைஜீரியா தடுக்காவிட்டால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நைஜீரியாவில் போக்கோ ஹராம் போன்ற பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களின் போது கிறிஸ்துவர்கள் பலரும் கொல்லப்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நைஜீரியா அரசு, பயங்கரவாத தாக்குதல்களால் அனைத்து மதத்தினரும் பாதிக்கப்படுவதாக கூறியது.இந்நிலையில், கிறிஸ்தவர்கள் படுகொலையை நைஜீரியா தடுக்காவிட்டால் அந்நாடு மீது ராணுவ தாக்குதல் நடத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தமது ட்ரூத் சோஷியல் வலைப்பதிவில் கூறி உள்ளதாவது; கிறிஸ்தவர்களை கொல்வதை நைஜீரியா அரசாங்கம் தொடர்ந்து அனுமதித்தால் அந்நாட்டுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்திவிடும். இந்த கொடூரமான அட்டூழியங்களில் ஈடுபடும், இஸ்லாமிய பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வகையில் சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க ராணுவத்திற்கு அறிவுறுத்துகிறேன். நமது அன்பான கிறிஸ்தவர்களை பயங்கரவாதிகள் தாக்குவது போல வேகமாகவும், கொடூரமாகவும் அமெரிக்காவின் தாக்குதல் இருக்கும். இதை நைஜீரியா நினைவில் வைத்துக் கொண்டு வேகமாக செயல்படுவது நல்லது.இவ்வாறு டிரம்ப் தமது பதிவில் கூறியுள்ளார்.