உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குடும்ப தொழிலுக்காக இந்திய உறவை தூக்கி எறிந்தார் டிரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி பேட்டி

குடும்ப தொழிலுக்காக இந்திய உறவை தூக்கி எறிந்தார் டிரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350

வாஷிங்டன்:'' டிரம்ப்பின் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் செய்ய பாகிஸ்தான் விரும்பியதால், இந்தியா உடனான உறவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார்,'' என அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார், இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு அந்நாட்டில் முக்கிய அதிகாரிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வுருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dczvp04h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மோடியின் சீன பயணம்இச்சூழ்நிலையில், பிரதமர் மோடி, சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியிருந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மோடி, '' உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகத்தை அதிகரிக்க இணைப்பை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்'' எனக்கூறியிருந்தார்.புலம்பல்இதனையடுத்து அமெரிக்க அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். அந்நாட்டின் கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறுகையில், 'இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பிரச்னை தீர்க்கப்படும். சீனா மற்றும் ரஷ்யா உடனான இந்தியாவின் உறவை விட அமெரிக்கா உடனான உறவு சிறப்பானதாக உள்ளது' எனத் தெரிவித்தார்.அதேநேரத்தில் டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ கூறுகையில், ' உலகின் இரண்டு சர்வாதிகாரிகளான புடின் மற்றும் ஜின்பிங் உடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி இருப்பது வெட்கப்பட வேண்டியது. இதில் எந்த அர்த்தமும் கிடையாது. அவர், அமெரிக்கா உடனும், ஐரோப்பா உடனும் மற்றும் உக்ரைனுடனும் தான் இருக்க வேண்டுமே தவிர, ரஷ்யா உடன் அல்ல' என்றார்.இந்தியா தேவைஇந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சலிவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: தொழில்நுட்பம், திறமை, பொருளாாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் நாம் இணைந்திருக்க வேண்டிய நாடான இந்தியா உடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா பணியாற்றியது. சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்திய உறவு தேவை.டிரம்ப்பின் குடும்பத்தினருடன் இணைந்து பாகிஸ்தான் தொழில் செய்ய விரும்புகிறது. இதனால், இந்தியா உடனான உறவை டிரம்ப் தூக்கி எறிந்து விட்டார் என நான் நினைக்கிறேன். இதனால், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும், தங்களுக்கும் இதேபோல் நிலைமை வருமோ என நினைக்கின்றன. நம்மை சார்ந்து இருக்க வேண்டாம் என அமெரிக்காவின் நட்பு நாடுகளும் நினைக்க துவங்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sivagiri
செப் 02, 2025 23:04

இங்கே சந்திரபாபு நாய்டுவை , தீயமுகாவும் , கேரளா கமனாட்டிகளும் இண்டி கூட்டணிக்கு வாங்க வாங்க ன்னு இழுப்பது போல . . . ,


Partha bhai
செப் 02, 2025 22:31

திகழ் ஓவியன், அவருடைய பெயருக்கு ஏற்றபடி கற்பனையான களத்தை கண்டு கொண்டிருக்கிறார். இவர்களைப் போன்ற புல்லுருவி இனம் அழிந்து விட்டாலே நாடு வளர்ச்சி பெறும்


Tamilan
செப் 02, 2025 22:18

அரசியல்


V Venkatachalam
செப் 02, 2025 20:57

இதே அமெரிக்கா அதிகாரி தமிழ் நாட்டிலிருந்து சாராய யாவாரி குடும்ப தொழிலுக்கு தமிழ் நாட்டை நாசம் பண்ணிப்புட்டார் அப்படின்னு பேசினால் அவரை அடியாட்களை விட்டு இரவோடு இரவாக காலி பண்ணிடுவாய்ங்க. அமெரிக்கா என்பதால் அந்த அதிகாரி உயிரோடு இருப்பார்ன்னு நம்பலாம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 20:52

பணக்கார கார்ப்பரேட் நண்பர்களுக்காக சாமானிய இந்திய மக்களின் நலனை காற்றில் பறக்க விட்ட பிரதமர். அதை பற்றியும் பேசுங்க


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 02, 2025 21:43

தமிழக மக்களின் நலனை காற்றில் பறக்க விட்டு பணக்கார தனது குடும்பம் கட்சிக்காரர்களுக்காக கனிம வளங்கள் கேரளாவிற்கு விற்று விட்டு கேரளா கழிவுகளை இலவசமாக பெற்று கொள்ளும் திராவிட மாடல். இதைப் பற்றியும் பேசலாம். தனது சொந்த சாராய ஆலைகள் இலாபம் கொளுத்து வாழ வேண்டும் என்பதற்காக தமிழக மக்கள் நலனை காற்றில் பறக்க விட்ட திராவிட மாடல். இதை பற்றியும் பேசலாம்


Shivakumar
செப் 03, 2025 03:37

ஏன்டா நீயெல்லாம் அறிவோடுதான் பேசுறியா... அவன் விருப்பத்துக்கு வரி போடுவான், ருசிஷியாகிட்டே இருந்து கச்சா என்னை வாங்காதே என்பான். அவன் பேச்சை கேட்க ஆரம்பித்தால் அவன் நம்மை அடிமை மாதிரி நடத்துவான். அவன் யாருடா இந்தியாவை அதிகாரம் செய்ய... அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவோ பொருட்கள் வாங்குறான். அவனை யாராவது நிறுத்த சொன்னார்களா.. அமெரிக்கா பேச்சை கேட்டு கொண்டு போக இது ஒன்றும் காங்கிரஸ் ஆட்சி இல்லை. இந்திய அரசு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். இந்த கருத்து கூந்தல் சொல்வதை விட்டுவிட்டு உன் வேலையை பாரு.


HoneyBee
செப் 02, 2025 20:44

சீக்கிரம் கதையை முடித்து மோடிஜி உங்கள் ஆட்டத்தை சாக்கடையில் வீசுவார்... இந்தியா எவ்வளவு இடர் வந்ததாலும் தாங்கும். அவ்வளவு மனவுறுதி உடையவர்கள் நாங்க.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 02, 2025 20:12

கட்டுமரம் நம்மை கடல்ல தூக்கி போட்ட மாதிரி


Barakat Ali
செப் 02, 2025 19:14

பப்ளிக்கா இப்படி பேசுறதை விட்டுட்டு ட்ரம்பிடம் பேசலாமே ????


தாமரை மலர்கிறது
செப் 02, 2025 19:08

பாகிஸ்தான் ட்ரம்பின் கிரிப்டோ தொழிலில் முதலீடு செய்கிறது. அரபு நாடுகளும் இதில் முதலீடு செய்துள்ளன. அதனால் இந்தியாவுடனான நட்பை பணத்திற்காக தூக்கியெறிந்துவிட்டார்.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 18:59

எட்டப்பர்கள் எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள் , அனால் ஒன்று இந்தியா சூத்திர கூட்டம் அமெரிக்கா உயர் பதவிகளில் அமர்ந்து விட்டார்கள் என்று தெரிகிறது , நேற்று அதானி பெட்ரோல் ரசியா விஷயம் அவ்வளவு துல்லியமா அலசி காய வைத்து விட்டார்களே


V N Srikanth
செப் 03, 2025 21:24

GOT 200RS FROM DRAIVSHA FAILURE MODEL GROUP. GO TO TASMAC AND DRINK LIQUOR AND WRITE YOUR COMMENTS. NOW ITSELF YOU ARE DOING THAT ONLY.


புதிய வீடியோ




அஜய் ரஸ்தோகியிடம் ஆதாரங்களை அளிக்க தவெக திட்டம்! Vijay

பொது

3 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



இன்றைய காலை முக்கியச் செய்திகள்

பொது

4 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771





தினமலர் எக்ஸ்பிரஸ்

செய்திச்சுருக்கம்

7 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



இன்றைய ராசிபலன்

ஆன்மிகம்

5 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771





8 சிறப்பு ரயில்கள் ரத்து: எவை எவை? முழு லிஸ்ட் Eight special trains cancelled chennai chengalpattu

பொது

15 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



தினமலர் எக்ஸ்பிரஸ்

செய்திச்சுருக்கம்

15 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771