உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கார் விலையை உயர்த்தக்கூடாது: நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

கார் விலையை உயர்த்தக்கூடாது: நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: வெளிநாடுகளில் இருந்து கார்கள் இறக்குமதி மீது 25 சதவீத வரி விதித்துள்ள காரணத்தால், உள்நாட்டில் கார்கள் விலையை உயர்த்தக்கூடாது என, அமெரிக்க கார் நிறுவனங்களை அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.கனடா, இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து, அமெரிக்கா இறக்குமதி செய்யும் கார்களுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். வரும் 3ம் தேதி இது அமலுக்கு வர உள்ளது. இறக்குமதி செலவு அதிகரிப்பு காரணமாக, வெளிநாட்டு கார்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்து விற்கும் நிறுவனங்கள், அந்த தொகைக்கு ஏற்ப கார்கள் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில், உள்நாட்டு விற்பனை விலையை கார் நிறுவனங்கள் உயர்த்தக்கூடாது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் தன் நடவடிக்கைக்கு, உள்நாட்டு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டுமென அவர் கூறினார்.நீண்ட கால அடிப்படையில், அமெரிக்க கார் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி உயர்வால் பலன் கிடைக்கும் என்றும்; உள்நாட்டு உற்பத்தியும், விற்பனையும் உயரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mecca Shivan
மார் 29, 2025 17:28

டிரம்ப் ஒரு திராவிட பப்பு


A.Gomathinayagam
மார் 29, 2025 14:13

வரியை உயர்த்தினால் கார் விலையை ஏற்றத்தான் செய்வார்கள் ,நஷ்டத்திற்கு எப்படி தொழில் செய்யமுடியும் ??


Srinivasan Krishnamoorthi
மார் 29, 2025 10:09

இது ஒரு புத்திசாலித்தனமான விஷயம் அல்ல


கிஜன்
மார் 29, 2025 08:08

சார் அவர் நாட்டுல அவரு என்னத்தையாவது பண்ணிட்டு போறாரு ... இன்று இந்தியாவை பற்றி அவர் சொல்லி இருப்பதை தலைப்பு செய்தியாக வெளியிடுவீர்கள் என எதிர் பார்த்தால் ..... இது தான் அவர் கூறியது ... India is one of the highest tariffing nations in the world. He Modi is a very smart man and a great friend of mine actually and we had very good talks. I think its going to work out very well between India and our country very, very well.


சமீபத்திய செய்தி