உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.பல்வேறு நாடுகளுக்கான வரியை கிடுகிடுவென உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் இந்த வரிவிதிப்பு முடிவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த அவகாசம் வரும் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.இதையடுத்து, உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், , 12 நாடுகளுக்கான புதிய வரிவிதிப்புக்கான கடிதங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும், இன்று இரவு அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார்.இந்த சூழலில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது, இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பொது கரன்சியை உருவாக்க நினைத்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Keshavan.J
ஜூலை 07, 2025 16:19

நாராயண இந்த கொசு தொல்லை தங்க முடியலடா


என்றும் இந்தியன்
ஜூலை 07, 2025 16:13

பைத்தியம் இவ்வளவு முற்றி விட்டதாகத்தெரிகின்றது


என்றும் இந்தியன்
ஜூலை 07, 2025 16:10

அமெரிக்க மக்களே தயவு செய்து ட்ரம்பை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து அவருக்கு நல்ல வைத்தியம் பார்க்கவும் அவருடைய பைத்தியக்காரத்தனம் எல்லைகடந்து விட்டது


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 14:30

எல்லோரையும் பகைத்துக் கொண்டாயிற்று. இனிமேல் தன் நிழலை பார்த்தே அதனுடன் சண்டை போடுவார்.


நடுநிலை குமார்
ஜூலை 07, 2025 12:37

அமெரிக்கா தயவுல வளர்ந்தவங்க அமெரிக்க டாலரையே தூக்கி எறிஞ்சா ட்ரம்ப் இல்லே யார் இருந்தாலும் காண்டாவாம என்ன செய்வாங்க? அங்கேயோ 35 டிரில்லியன் டாலர் கடன் மூச்சை முட்டுது.


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 14:29

முற்காலத்தில் மேற்குலக நாடுகள்தான் பிறநாடுகளின் வளங்களை சுரண்டி வளர்ந்ததாகத் தகவல். இப்போ சுரண்டும் வழிகள் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆத்திரம் பெருகுகிறது. BRICS நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக டாலரைக் கைவிட்டுவிட்டு மறைமுக பண்டமாற்று வழியில் இறங்குவதால் எரிச்சல்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 07, 2025 12:13

அவரது மன ஆரோக்கியம் சோதிக்கத்தக்கது ....


அசோகன்
ஜூலை 07, 2025 12:00

டாலரை தூக்கினால் போதும் அமெரிக்காவின் வருமானம் போகும்.... அதோடு அவர்களால் வளர்க்கப்படும் தீவிரவாத கும்பலும் ஒழியும்


Narayanan
ஜூலை 07, 2025 11:46

உலக நாடுகள் அமெரிக்காவை உதாசீனம் செய்ய வேண்டும் . சும்மா பணத்தை அச்சிட்டு வல்லரசாக காண்பித்து உலக நாடுகளை மிரட்டும் இந்த போக்கை உலக நாடுகள் மாற்றவேண்டும்.


Naga Subramanian
ஜூலை 07, 2025 11:29

இந்த ஆளுக்கு ....


தத்வமசி
ஜூலை 07, 2025 11:22

சூப்பர். அமெரிக்காவால் உலகமா? உலக நாடுகளால் அமெரிக்காவா? இப்படியே சென்றால் தான் அமெரிக்காவின் சக்தி என்னவென்று உலகத்திற்குத் தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை