உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐரோப்பிய தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி; அறிவித்தார் டிரம்ப்

ஐரோப்பிய தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி; அறிவித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற மறு நொடியில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். முதலில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்தது. பின்னர் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் டிரம்ப் கவன்ம் செலுத்தினார். தற்போது அவர் அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலடி கொடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். தற்போது அவரது கவனம் மதுபானங்கள் மீது திரும்பி உள்ளது. இது குறித்து டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்தால், பதிலுக்கு அமெரிக்காவிலும் வரி அதிகரிக்கப்படும். எனவே ஐரோப்பிய யூனியன் இந்த வரியை உடனடியாக நீக்க வேண்டும்.இல்லையென்றால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து வரும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும். இந்த அதிகப்படியான வரி விதிப்பு அமெரிக்காவில் உள்ள மதுபான வணிகத்திற்கு பயன் அளிக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vee srikanth
மார் 14, 2025 12:50

வரி என்ற பெயரில் அமெரிக்கர்களை வறுத்து எடுக்கிறார் கோமாளி


Oru Indiyan
மார் 14, 2025 08:32

இவர் அமெரிக்க ஸ்டாலின்


Raj
மார் 14, 2025 08:26

அழிவின் விழிம்பில் அமெரிக்கா.


Appa V
மார் 14, 2025 20:36

அரபு நாடுகளில் இருக்கும் பெட்ரோல் மற்றும் கேஸ் இருப்புகளைவிட அமெரிக்காவிடம் அதிகம் இருக்கிறது ..நீங்க தமிழ் சரியா கத்துக்கோங்க


Appa V
மார் 14, 2025 07:44

அமெரிக்க விஸ்கிகள் வாயில் வைக்க வழங்காது ..Jack Daniel விஸ்கி நமது நாட்டு சரக்குகளை விட மகா மட்டம் ..


Ganesh
மார் 14, 2025 12:07

எப்படியோ.... அதிக வரி போட்டு நம்ம குடிமகன்களையும் வாய்க்கு விளங்காத தண்ணி யை குடிக்க விடாம மோடி காப்பாத்தி இருக்கார்... ஹா ஹா


முக்கிய வீடியோ