உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் டிரம்பின் புதிய வரிகள்: மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25%: பாதிப்பு யாருக்கு?

அதிபர் டிரம்பின் புதிய வரிகள்: மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25%: பாதிப்பு யாருக்கு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25% இறக்குமதி வரிகளை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.அக்டோபர் 1ம் தேதி முதல் மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் 100 சதவீத வரியை அறிவித்தார். இது இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 1ம் தேதி முதல், எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100% வரி விதிப்போம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6dxm8vs5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு நிறுவனம் அமெரிக்காவில் தங்கள் மருந்து உற்பத்தி ஆலையைக் கட்டவில்லை என்றால், வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறோம். மருந்து நிறுவனம் கட்டுமானங்களை தொடங்கினால் இந்த மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் இருக்காது. இவ்வாறு அந்த பதிவில் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.அதேபோல், அக்டோபர் 1ம் தேதி முதல் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும், கனரக லாரிகளுக்கு 25 சதவீத வரியும் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார்.

பாதிப்பு யாருக்கு?

இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு, குறிப்பாக மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் துறையில், அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு $3.6 பில்லியன் (ரூ. 31,626 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் $3.7 பில்லியன் (ரூ.32,505 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இந்த புதிய வரி விதிப்பு இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 26, 2025 22:21

ஏற்கனவே அமெரிக்காவில் மருந்து விலை பகல் கொள்ளை தான். இந்த பைத்தியத்தினால் இன்னும் விலை விண்ணை தாண்டும். அரசு மருத்துவ நிதியை Medicare and Medicaid நம்பி இருக்கும் சில கோடி குடும்பங்களுக்கு உதவியை நிறுத்தி விட்டான். ஏழைகளே இல்லாத நாடு ஆக்குறான் போல. யாரை பாத்து கெட்டுப் போறான் என்று தெரியவில்லை


ஜெய்ஹிந்த்புரம்
செப் 26, 2025 22:21

ஏற்கனவே அமெரிக்காவில் மருந்து விலை பகல் கொள்ளை தான். இந்த பைத்தியத்தினால் இன்னும் விலை விண்ணை தாண்டும். அரசு மருத்துவ நிதியை Medicare and Medicaid நம்பி இருக்கும் சில கோடி குடும்பங்களுக்கு உதவியை நிறுத்தி விட்டான். ஏழைகளே இல்லாத நாடு ஆக்குறான் போல. யாரை பாத்து கெட்டுப் போறான் என்று தெரியவில்லை


அப்பாவி
செப் 26, 2025 16:06

அமெரிக்கா நிலைமை அவனுக்குதான் தெரியுது. 35 டிரில்லியன் டாலர் கடன். நல்ல வேலைளெல்லாம் ஹெச்1 ஆளுங்களுக்குப் போகுது. உற்பத்தியெல்லாம் சீனா கையில். அமெரிக்காவில் அவனவன் பீட்சா, பர்கர் விக்கிறான். இப்போ இப்பிடி செஞ்சாதான் அமெரிக்கா உருப்படும்.


Anand
செப் 26, 2025 15:19

மெலானியாவிற்கு எப்போது வரி விதிப்பான்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 26, 2025 13:39

முழு நேர வியாபாரியை அமெரிக்கா மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.


Moorthy
செப் 26, 2025 12:45

டிரம்ப் என்ன முயற்சி செய்தாலும் நமோ வை பணிய வைக்க முடியாது


ஜெய்ஹிந்த்புரம்
செப் 26, 2025 22:14

ஆமாப்பு, ஒண்ணுமே பண்ண முடியாது. ஏன்னா வாயை மூடிட்டு ஒண்ணுமே பண்ண மாட்டார்.


Kumar Kumzi
செப் 26, 2025 12:30

மிக சிறந்த கோமாளி கூமுட்ட என்று நோபல் பரிசை கூடிய சீக்கிரமே Trump டிரம்ப்க்கு கிடைத்து விடும்


Pradyuth Vivekanandan
செப் 26, 2025 11:59

அமெரிக்கா பொருள்களை உபயோகம் பண்ணாதீர்கள் Stop using Facebook , இன்ஸ்டாகிராம், twitter அத்யாவசிய தேவைகளை தவிர, மாற்றத்தை தவீருங்கள்


Ramesh Sargam
செப் 26, 2025 11:58

உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே. அதையே சிறிது மாற்றி டிரம்புக்காக: உழைத்து வாழ வேண்டும், பிறர் மீது அதிக வரி வசூலித்து வாழ்ந்திடாதே. சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.


KavikumarRam
செப் 26, 2025 11:32

கொரோனா காலத்துலயே நாம இந்த அமேரிக்கா மருந்து மாஃபியாவை அடிச்சு தூக்கி ஃபைசர் போன்ற கிரிமினல் மருந்து கம்பெனியவே கால்ல போட்டு மிதிச்சு நமது பாரத் பயோடெக் மருந்துகளை உலகம் முழுதும் இலவசமா நம்ம பாரதம் சப்ளை பண்ணிச்சு. அதுவும் இல்லாமல் தற்போதைய மத்திய அரசு இந்தியா முழுவதும் இலவச ரேஷன் கொடுத்து சாதனை புரிந்தது. அதனால இந்த 100% 200% வரி இதெல்லாம் என்ன ஜுஜுபி. டிரம்ப் அவர் நாட்டுக்கு என்ன நல்லது பண்ணனும்னு தோணுதோ அதை அவர் செய்யிறார். இதெல்லாம் நமக்கு கிடைத்த சிறந்த வாய்ப்புகள். பாரதம் இனிமேல் அமெரிக்காவை ஒரு கடைநிலை சப்ளையாரா மட்டும் வச்சுக்கிட்டு மிச்ச உலக நாடுகளுக்கு நமது வியாபாரத்தை விஸ்தீகரிக்கும் அருமையான காலம் கனிந்து கொண்டிருக்கிறது.


சமீபத்திய செய்தி