உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும்; கனடாவுக்கு டிரம்ப் ஆபர்!

அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும்; கனடாவுக்கு டிரம்ப் ஆபர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும், 51வது மாநிலமாக ஆக வேண்டும் என்று கூறி வருகிறார். அவர் கூறுவதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. எனினும், டிரம்ப் தான் கூறுவதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xph0ijwq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். உட்கட்சியில் அவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. 9 ஆண்டுக்கு மேலாக பிரதமராக இருக்கும் அவருக்கு மக்கள் செல்வாக்கும் பெருமளவு சரிந்து விட்டது. வரவிருக்கும் தேர்தலில் அவரது லிபரல் கட்சி தோல்வி அடையும் என்று பலரும் கணித்துள்ளனர். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி தூக்கினர்.இத்தகைய சூழ்நிலையில் தான் ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துவிட்டார்.இது தொடர்பாக, வருங்கால அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிடம் இருந்து, இனிமேல் மானியங்கள் உள்ளிட்டவை கனடாவுக்கு கிடைக்காது. இதை அறிந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும். மேலும் ரஷ்யா மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து அவை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றுபட்டால், அது எவ்வளவு பெரிய தேசமாக இருக்கும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Baskaran
ஜன 07, 2025 13:36

இந்தியாவுக்கும் ஒரு ஆஃபர் கொடுங்க டிரம்ப் அவர்களே


R Dhasarathan
ஜன 07, 2025 13:06

இத்தாலி?


Yes your honor
ஜன 07, 2025 10:43

சரியாய் போச்சு, அப்புறம் காலிஸ்தானும், பாகிஸ்தானும் யார் பெரிசுன்னு அடிச்சுக்காட்ட ஆரம்பித்தால் தான் தீவிரவாதம் என்றால் என்ன, பயங்கரவாதம் என்றால் என்ன என்று அமெரிக்காவிற்கும் புரியும்.


sankaranarayanan
ஜன 07, 2025 10:36

அப்படியே இந்தியாவையும் 52-ஆவது மாநிலமாக சேர்த்துக்கொண்டால் மக்கள் சந்தோஷப்படுவார்கள் நலமாக இருப்பார்கள் நாடும் முன்னேறும்


N.Purushothaman
ஜன 07, 2025 10:15

கடனாவுக்கு பதிலா மெக்சிக்கோவை இணைச்சி போதை பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைங்க ..


Kasimani Baskaran
ஜன 07, 2025 09:29

நல்ல யோசனை. கூடுதலாக சீக்கிய தீவிரவாதத்தையும் இலவசமாக ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.


muthu
ஜன 07, 2025 09:15

Good Diplomatic intiative by Trump..


GMM
ஜன 07, 2025 09:08

அமெரிக்காவுடன் பாதுகாப்பு, பொருளாதாரம் கருதி கனடா இணைய வேண்டும். இது போல் கிரீன் லேண்ட், மெக்ஸிகோ இணைய வேண்டும்.


புதிய வீடியோ