உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தேர்வு

மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாக்ஹோம்: நடப்பு 2024ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.ஆண்டு தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து சேவையாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=29hfqhos&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தாண்டு, மருத்துவத்திற்கு பெருமை சேர்த்த இரு விஞ்ஞானிகளான விக்டர் அம்புரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக சுவீடனின் கரோலின்ஸ்கா பயிற்சி மையத்திலிருந்து இன்று அறிவிக்கப்பட்டது.மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்து அது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.விக்டர் அம்புரோஸ்(70) கேரி ருவ்குன் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை