உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போர் முடிவுக்கு வருமா: டிரம்ப் -ஜெலன்ஸ்கி பேச்சு முறிவு

உக்ரைன் போர் முடிவுக்கு வருமா: டிரம்ப் -ஜெலன்ஸ்கி பேச்சு முறிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் வேலோமிடிர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்தார். அப்போது ரஷியாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

USER_2510
மார் 01, 2025 06:38

Donald Trump aims to influence Ukraine, which may affect his public statements. Therefore, there should be guidelines for Trump to follow, particularly in front of the media. For instance, he should avoid using terms like "stupid president." He would avoid such language when addressing leaders like Putin and Xi Jinping. s://www.youtube.com/watch?v=QMKdOHYdNLs


Bye Pass
மார் 01, 2025 04:47

ரெண்டு காமெடியன்கள் கவுண்டமணி செந்தில் பாணியில் ..


நிக்கோல்தாம்சன்
மார் 01, 2025 03:38

அப்பாவி உக்க்ரைனிய பொதுமக்களின் வரிப்பணமும் , உக்ரைனிய இயற்கை வளமும் இனி திமுக கையில் சிக்கிய கனிம வளம் போல தான்


புதிய வீடியோ