உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டு கூலிப்படையை நம்பியிருக்கும் ரஷ்யா; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகீர் குற்றச்சாட்டு

வெளிநாட்டு கூலிப்படையை நம்பியிருக்கும் ரஷ்யா; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: 'போரில் தாக்குதல் நடத்த வட கொரியா படைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது. அடையாளம் தெரியாமல் இருக்க இறந்த வீரர்களின் முகத்தை எரிக்கின்றனர் ' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில், ரஷ்யா வெளிநாட்டு கூலிப்படையை நம்பியிருக்கிறது. இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும். போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். போரில் இறந்த வட கொரியா வீரர்களின் முகத்தை ரஷ்யா எரிக்கிறது என வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் ஜெலன்ஸ்கி பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பல வருடப் போருக்குப் பிறகும், ரஷ்யர்கள் இன்னும் மோசமானவர்களாக உள்ளனர். ரஷ்யா வட கொரியப் படைகளை உக்ரைன் மக்களை தாக்குவதற்கு அனுப்புவது மட்டுமல்லாமல், இந்த மக்களின் இழப்புகளை மறைக்கவும் முயற்சிக்கிறது. வட கொரியா வீரர்களை போரில் தாக்குவதற்கு அனுப்புவதை மறைக்க முயன்றனர். பயிற்சியின் போது அவர்களின் முகத்தைக் காட்ட தடை விதிக்கப்பட்டது. அவர்கள் ஆதாரத்தையும் அழிக்க முயன்றனர்.இப்போது, ​​​​எங்கள் வீரர்களுடனான போரில், கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களின் முகங்களை ரஷ்யர்கள் எரிக்கின்றனர். இது அவமரியாதை. வட கொரியர்கள் புடினுக்காக சண்டையிட்டு மடிவதற்கு ஒரு காரணமும் இல்லை. வெளிநாட்டு கூலிப்படையை ரஷ்யா நம்பி இருக்கிறது. இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும். இந்த மோசமான செயலுக்கு, பதிலாக ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Natarajan Palani
டிச 19, 2024 07:20

தி


தத்வமசி
டிச 18, 2024 20:30

ரஷ்யாவிற்கு கூலி கொடுக்கும் அளவுக்கு பணபலம் உள்ளது. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? பி.... சை எடுத்துத் தானே சண்டை போடுகிறீர்கள் ? இப்படி சண்டை போட்டு நாட்டை நாசமாக்க வேண்டுமா ?


Kumar
டிச 18, 2024 14:02

எந்த ஒரு நாட்டிலும் ஒரு காமெடியன் ஜனாதிபதி ஆனால் இது தான் கதி ஐரோப்பிய கொத்தடிமை


அப்பாவி
டிச 18, 2024 12:04

இந்தியா ஆளுங்களே அங்கே ரஷ்யா ராணுவத்தில் சண்டை.போடறாங்களாமே.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 18, 2024 11:25

நம்மூரு இம்சை அரசரைப்போல இவரும் இரும்புக்கரம் உள்ளவர் ....... அறிவாளி .......


M Ramachandran
டிச 18, 2024 11:19

வந்துட்டாரைய்யா உத்தம புத்திரன். இவனென அமெரிக்கா வின் கை கூலி கூலிக்கு மாரடிக்கும் ஏஜென்ட்டு


Sundar Pas
டிச 18, 2024 10:45

நீயும் உனது நாடு மொத்தமும் அமெரிக்காவுக்கு கூலிப்படையாக இருந்துகொண்டு இப்படி பேச வெட்கமாயில்ல?


RAMAKRISHNAN NATESAN
டிச 18, 2024 10:24

இப்படியெல்லாம் பேசவேண்டியது. அப்புறம் ரஷ்யா அடிக்கிற அடி தாங்க முடியாமே இந்தியா வந்து மத்தியஸ்தம் செஞ்சாத்தான் உண்டு ன்னு கதற வேண்டியது .......


gibra
டிச 18, 2024 10:05

உக்ரைன் ராணுவத்தில் இங்கிலாந்து வீரரை கைது பண்ணும் போது உங்களுக்கு எங்கே போனது


ManiK
டிச 18, 2024 08:17

லிபரல் இடதுசாரி வன்முறை கும்பலிடம் பிச்சை கேட்டு போர் நடத்தும் இந்த கிறுக்கனுக்கு இன்னும் ஒரு மாதம்தான் கெடு. ட்ரம்ப் கிட்ட இவன் நாடகம் நடக்காது.


சமீபத்திய செய்தி