உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளித்தது உக்ரைன்

அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளித்தது உக்ரைன்

வாஷிங்டன் : உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகை தொடர்பாக, அமெரிக்கா - உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஐரோப்பிய நாடுகளும், அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அப்போதைய அமெரிக்க அரசும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் நிலைமை மாறியது. உக்ரைனுக்கு உதவிகளை நிறுத்தினார். போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்தார். இதுவரை அமெரிக்கா செய்த உதவிகளுக்கு விலையாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு தரும்படி டிரம்ப் நிர்பந்தம் செய்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், டிரம்பின் நெருக்கடியை அவரால் தாங்க முடியவில்லை. எனவே, ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா சென்றார். அப்போது டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே போர் தொடர்பாக காரசார விவாதம் ஏற்பட, ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே ஜெலன்ஸ்கி திரும்பினார்.இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு பின், உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில், இரு நாடுகளும் நேற்று முன்தினம் கையொப்பமிட்டன. இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், “ஒப்பந்தம் கையெழுத்தானது. உக்ரைனுக்கு அளித்ததை விட அவர்களிடம் இருந்து அதிகம் பெற்றுள்ளோம். செய்த முதலீட்டுக்கான பலன்களை பெறாமல் இருக்க அமெரிக்கா முட்டாள் அல்ல,” என்றார்.அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்க அனுமதி வழங்கியதற்கு பிரதிபலனாக, போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தர அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

என்ன வகை கனிமங்கள்?

உக்ரைனில் அரியவகை கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. உலகின் மொத்த அரியவகை கனிமங்களில், 5 சதவீதம் அந்நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, விமான இறக்கை மற்றும் இதர விமான உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு பயன்படும், 'டைட்டானியம்' இங்கு உள்ளது.அணுசக்தி, மருத்துவ உபகரணங்கள், ஆயுதங்கள் தயாரிப்புக்கு பயன்படும் யுரேனியம், மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புக்கு பயன்படும், 'லித்தியம், கிராபைட், மாங்கனீஸ்' கனிமங்களும் இங்கு குவிந்து கிடக்கின்றன. இதுதவிர, எண்ணெய் உள்ளிட்டவற்றையும் எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMAKRISHNAN NATESAN
மே 02, 2025 11:52

அதற்குத்தான் வலியவந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உதவின ....


M R Radha
மே 02, 2025 06:55

இதே கட்டுக் குடும்பமாக இருந்திருந்தால் நாட்டுக்காக இல்லாமல் வீட்டுக்காக லவட்டியிருக்கும்


உண்மை கசக்கும்
மே 02, 2025 06:36

போருக்கு உதவியா. பொருளாதார சுரண்டலாம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிச்சைகாரா?


Mani . V
மே 02, 2025 05:15

இந்த அயோக்கியத்தனத்துக்குத்தானே அமெரிக்கா உக்ரேனுக்கு ஆதரவு அளித்தது.


Srinivasan Krishnamoorthy
மே 02, 2025 10:54

only Biden government lavished us tax payers money on ukraine war, most of the three years ukraine had been in the receiving end and lost half of its territory. trump rightly wants to recover war aid from ukraine, why Biden administration spent unnecessarily on war, who wad responsible for American tax payers money


முக்கிய வீடியோ