உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

கீவ்:: கி: ழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்: இந்நிலையில், போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சமூக வலைதள ப க்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: உக்ரைன் பிணைக் கைதிகள் 1,200 பேரை அழைத்து வரும் வகையில், மீண்டும் கைதிகள் பரிமாற்றத்தை துவங்குவதற்கான பணியை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பல கூட்டங்கள், பேச்சுகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்தியஸ்தத்துடன் பரிமாற்றங்களை மீண்டும் துவங்குவது குறித்து ஆலோச னை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்தான்புல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பரிமாற்றம் இருக்கும். இதற்கு ரஷ்யாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து ரஷ்யா உடனடியாக கரு த்து தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ