வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ஒரு அமெரிக்க அதிபர் உக்ரைனை நேட்டோவில் இணையச் சொல்லி சண்டைய ஆரம்பிச்சு வச்சுட்டு போய்ட்டார். இப்ப வந்த இன்னொரு அறிவாளி அமெரிக்க அதிபர் நேட்டோவில நீ இணையக் கூடாது சண்டைய நிறுத்துங்கிறார். நான் பாட்டுக்கு சிவனேன்னுதான இருந்தேன் யார் வம்புக்கு தும்புக்கும் போனேனா? உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்ப ரணகளம் ஆக்கிப்பிட்டிங்களே ? என ஜெலன்ஸ்கிய பாவம் புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் இரு வெவ்வேறு அமெரிக்க அதிபர்கள். இது உக்ரைனுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் ஒரு நல்ல பாடம். அமெரிக்காவை முழுமையாக நம்பி களமிறங்கினால் அதோ கதிதான்.
இதை தானே புடின் ஆரம்பத்திலேயே சொன்னாரு.
பெரியண்ணன் இருக்கும் தைரியத்தில் ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணைய எத்தனித்தார் இப்போது இன்னொரு பெரியண்ணன் இணையக்கூடாது என்கிறார் . இப்போது நடுத்தெருவில் நிற்பது ஜெலன்ஸ்கி .
நேட்டோவில் இணையவேண்டும் என இதுநாள் வரை சண்டை, இனி நேட்டோவில் இணையக்கூடாது என சண்டை..
ஐரோஆப்பியா நாடுகள் அமெரிக்காவின் பகடை காய்கள். மூளை கெட்ட கேலன்சிக்கி ஒரு பகடை காய். ரஷ்யா கூறும் அவர்கள் தரப்பு ஜ்யாயமானதெ. அது தான் அடிப்படை காரணம்.ஐரோப்பா மற்றும் நாட்டாமை அமெரிக்கன் தந்திரம் ரஷ்ய நன்கு அறியும். முன்பு ஒரு சமயம் ரஷியா மிக கடுமையான உணவு பஞ்சம் ஏர்பட்ட சமயத்தில் அமெரிக்காவிடம் கைஏந்தும் நிலையேர்பட்ட போது வஞ்சக அமெரிக்காவிடம் கோதுமை வாங்க ஒப்பந்தமான போது 7 கப்பல்களில் கோதுமை மாவை அனுப்பி வைத்தது.அது ரஷ்சியா வந்தடையய்ந்ததும் அதைய்ய சோதித்து பார்த்த போனது கண்ணாடி துகள்கள் கலக்க பட்டிருந்தது தெரிந்து அந்த 7 கப்பலமாவையும் கடலில்கொட்டும் படி உத்தரவு யிட்டார் கோர்ப்பச்சேவ். அவர் பதவியும் இழந்தார். பிற்காலத்தில் மனமுடைந்து இறந்தார். மனிதாபிமான அற்ற செயல் செய்வது யார் என்று தெரிகிராதா." இதேர் போல் நம்மிடமும் நடந்து கொண்டது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று உக்ருன் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளலாம். இதற்கு அந்த நேட்டோ அமைப்பு நாடுகள அந்த பருத்திக் கொட்டை மூட்டைகளை கோடவுனிலேயே வைத்திருந்திருக்கலாம். நேட்டோவினால் சின்னாப்பின்னமாகி, பாதி மக்களை இழந்து, மீதப்பேர்களை நாடுகடத்தி…
ஆபரேஷன் சக்சஸ் பட்.... பேஷன்ட் டைட் கதை தான். நேட்டோ அமைப்பு உக்ரைனை சேர்த்து கொள்ள மாட்டோம் என்று கூறி இருந்தால் இந்த போரே வந்திருக்காது அல்லது எப்போதோ நின்றிருக்கும். ரஷ்யா உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தவுடன் ட்ரம்ப் மிகவும் பயந்து விட்டார். முதலாவதாக அமெரிக்கா ஆயுதங்கள் உக்ரைனுக்கு பெரிய அளவில் உதவவில்லை. மார்க்கெட்டில் அமெரிக்கா ஆயுதங்கள் விலை போகாமல் போய்விடுமோ என்ற பயம் இப்போது ட்ரம்ப். இரண்டாவது உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதே அமெரிக்கா அதன் கனிம வளங்களை குறைந்த செலவில் அள்ளிக் கொண்டு போக. எப்படி கேரளா தமிழகத்தின் கனிம வளங்களை குறைந்த செலவில் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் ட்ரம்ப் ஆதரவோடு வாங்குகிறதோ அது போல. மூன்றாவது அந்த கனிம வளங்கள் ட்ரம்ப் மகன்கள் கம்பெனி மூலமாக நடக்க வேண்டும் என்றால் ட்ரம்ப் அதிபராக இருக்க வேண்டும். ஆகவே இன்னும் மூன்று வருடங்கள் மட்டுமே மிச்சம் இருப்பதால் எப்படியாவது போரை நிறுத்தி ஆயுத சப்ளைக்கு மாற்றாக கனிம வளங்கள் அள்ள வேண்டிய அவசரம் தற்போது ட்ரம்பிற்கு உள்ளது. நான்காவது கனிம வளங்கள் உள்ள பகுதியை ரஷ்யா கைப்பற்றி கொண்டால் உக்ரைன் இடமிருந்து கனிம வளங்கள் கிடைக்காது இது வரை கொடுத்த ஆயுதங்களும் பணம் கிடைக்காது என்பது. ஆகவே கனிம வள ஆசையில் ட்ரம்ப் இறங்கி வந்தே ஆக வேண்டும். உக்ரைனுக்கு ஆயுத சப்ளை நிறுத்தி போரை நிறுத்த வேண்டியே ஆக வேண்டும்.
பிரச்சனையே அது தானே. நேட்டோவில் இணைவதாக ஜெலன்ஸ்கி சொல்லாவிட்டால் சண்டையே இல்லையே. ஒரு சிறு நிலப்பரப்பை ரஷ்யாவிடம் திரும்ப கொடுத்து விட்டு, உக்ரைன் வளங்கள் மக்களுக்கு பயன்படுமாறு செய்யனும். பாதுகாப்பு பொறுப்பு அமெரிக்கா பார்த்துக்க கைமாறாக இயற்கை வளங்களை உக்ரைனிடமிருந்து அமெரிக்கா வாங்கும். இது தான் ட்ரம்ப் திட்டம். Cowboy ஜெலன்ஸ்கி சம்மதிக்காவிட்டால் அங்கு ஆட்சி மாற்றம் தான் வழி.
புதினை சந்தித்த பிறகு டிரம்பர் அடிச்சார் பாருங்கள் ஒரு அந்தர் பல்டி........
பிரச்னை நேட்டோவில் இணைய இருந்ததால் தான். என்னமோ ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறான். இதை தாண்டா ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே சொல்லுது. ட்ரம்ப்புக்கு இப்போ வேறு வழியில்லை அவனுக்கு நோபல் பரிசு கிடைக்க என்ன வேணும்னாலும் செய்வான். அமெரிக்கா ஆயுதங்கள் சந்தையில் விலைபோவதில்லை. இருக்குற கொஞ்சம் மான மரியாதையும் காத்துல பறந்திடுமோன்னு பயம்.