வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சமரசத்திற்கு வழியில்லாத வகையில் இரு நாடுகளும் போராடுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. எவ்வளவு அழிவு. இரு நாடுகளும் அழிந்து வருகின்றன. 1980க்கு முன்னால், இவர்கள் அனைவரும் சோவியத் ரஷ்யா என்று ஒன்றாக இருந்தனர்.
மாஸ்கோ: ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்பும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், இருதரப்பிலும் பரஸ்பரமாக தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் கிவ்வில் இருந்து 1,700 கிமீ தொலைவில் உள்ள ரஷ்யாவின் ஒரன்பர்க் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய எரிவாயு நிலையத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் எரிவாயு நிலையத்தின் ஒரு பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்துள்ளது. ரஷ்யாவின் சைபீரியா மற்றும் யூரல் மலைப்பகுதிகளிலும் இதே போன்ற தாக்குதல்கள் நடந்துள்ளனஇந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. அருகே உள்ள குடியிருப்புகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எரிவாயு நிலையத்தின் மீதான தாக்குதலால், ஒரன்பர்க் விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதேவேளையில், இந்த தாக்குதலின் போது சமாரா பகுதியிலும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பாதிப்புகள் குறித்து அவர்கள் எந்த தகவலையும் வெளியடவில்லை.
சமரசத்திற்கு வழியில்லாத வகையில் இரு நாடுகளும் போராடுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. எவ்வளவு அழிவு. இரு நாடுகளும் அழிந்து வருகின்றன. 1980க்கு முன்னால், இவர்கள் அனைவரும் சோவியத் ரஷ்யா என்று ஒன்றாக இருந்தனர்.