உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை

எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'பிற நாடுகளின் மீது வரி விதிக்கும் முடிவால் பாதிப்பு தான் ஏற்படும்' என்று ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்றது முதல் டிரம்ப், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, சட்டவிரோத குடியேறிகளை தடுக்கத் தவறியதற்காகவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தாதற்கும், மெக்சிகோ, கனடா மீது தலா 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரியையும் விதித்தார். இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது 25 சதவீத வரிகளை கனடா விதித்தது. அதேபோல, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவால், அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக கனடாவும், மெக்ஸிகோவும் தான் உள்ளன. காரணம், அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதமும், அமெரிக்க அலுமினிய இறக்குமதியில் மெக்சிகோவும் தான் அதிக பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை தொடுத்தால், அனைத்தையும் இழக்க நேரிடும் என்று ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; நாம் உலகளாவிய பொருளாதாரத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. வரி இல்லாத வர்த்தகத்தின் மூலம், அனைத்து நாடுகளும் பயனடைய முடியும். வரிகளை சுமத்தி வர்த்தகப் போரில் ஈடுபட்டால், அனைத்தையும் இழக்க நேரிடும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MARUTHU PANDIAR
மார் 13, 2025 20:04

மற்ற நாடுகளின் வெறுப்பை சம்பாதிக்கும் அதே நேரத்தில், நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பைரொம்ப நாளைக்கு மிரட்டிப் பெற முடியாது


MARUTHU PANDIAR
மார் 13, 2025 19:51

பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் இது போன்ற முறையற்ற, வீம்புக்கு மேற்கொள்ளப் படும் வரி விதிப்பை பற்றி அன்றே எவ்வளவு தெளிவாக கூறியுள்ளார் தெரியுமா? இது போன்ற திடீர் வரி விதிப்புகளால் , தேச நலனில் அக்கறை செலுத்துவது என்ற பெயரில் , அமெரிக்க தயாரிப்புகளை முன்னுரிமைப் படுத்துவது போல தோன்றினாலும், முதலில் ஒரு குறுகிய காலத்துக்கு பலன் இருப்பதை போல் தோன்றினாலும், போகப் போக மக்களின் வாங்கும் திறன் சிறிது சிறிதாக குறைந்து , தொழில் மற்றும் வியாபாரத் துறை அப்படியே முடங்கி , லட்சக்கணக்கானவர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் . அதனால் அறவே தொழில் போட்டி குறைந்து விலைகள் உச்சத்துக்கு சென்று விடும் என்று தெளிவாக கூறியிருப்பது வியப்பாக உள்ளது ...


Kanns
மார் 13, 2025 15:50

Sack& Punish All World Bodies incl ICC Biasing-Licking Dangers of Humanity WorldPeace& InJusticeChinese Communists Islamic Fundamentlists& WhiteEuropean Expansionists


M R Radha
மார் 13, 2025 14:16

இன்றைய ஐநா பல்லில்லா முதலை, வாயில்லா சிஙகம்


Sridhar
மார் 13, 2025 13:51

கொரோனாவுல சீனாவோட சேர்ந்து ஏகப்பட்ட ஊழல்களை பண்ணின இந்த ஆளு, இப்பக்கூட ஐநா வசதிகளை ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படவைத்த கயவன் அமெரிக்காவுக்கே சவால் விடறான்? இவனால் உலகத்துக்கே பெரும் ஆபத்து இவனை சீக்கிரமே தூக்கி எறியவேண்டும்.


M R Radha
மார் 13, 2025 13:27

ஸ்டாக் மார்க்கெட்டில் இரும்பு & அலுமினியம் ஷேர்களை வாங்குங்கள். ஏனெனில் டிரம்பின் நடவடிக்கையால் இரும்பு & அலுமினியம் அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும்


Narasimhan
மார் 13, 2025 13:20

இவரு இருப்பதே அமெரிக்காவில் என்பதை மறந்து பேசுகிறார் இந்த சீனாவின் கொத்தடிமை. அமெரிக்காவை வீழ்த்த யாராலும் முடியாது


Sivagiri
மார் 13, 2025 13:01

ஆனால், தன்னோட, பர்ஸை, பாதுகாக்கணும்னா, திருட்டுப்பயல்களை தூர வைக்கிறதுதானே உலக வழக்கம்? துஷ்டர்களை கண்டால் தூர விலகுன்னு - சும்மாவா சொல்லிருக்காய்ங்க . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை