உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: இந்தியர் உயிரிழப்பு

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: இந்தியர் உயிரிழப்பு

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹர்லென் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 வயதான இந்தியர் உயிரிழந்தார் . 17 பேர் காயமடைந்து உள்ளனர்.உயிரிழந்த மாணவர் இந்தியாவைச் சேர்ந்த பசீல் கான் என்பதும், அங்கு பத்திரிகையாளர் ஆக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. குடியிருப்பின் 3வது மாடியில் உள்ள வீட்டில் லித்தியம் பேட்டரி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில், அங்கிருந்த 18 பேர் மீட்கப்பட்ட நிலையில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்திய மாணவரின் மரணம் குறித்து நியூயார்க்கில் உள்ள நமது தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 27 வயதான பசீல் கான் என்ற இந்திய மாணவர் உயிரிழந்தது சோகமான விஷயம். அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளோம். இந்தியாவிற்கு பசீல் கானின் உடலை அனுப்பி வைக்க தேவையான அனைத்து உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 26, 2024 00:19

அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.


Ramesh Sargam
பிப் 26, 2024 00:19

மிகவும் மனம் வருந்துகிறேன். ஆன்மா சாந்தி அடைத்தும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை