உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மூடப்பட்டது யு.எஸ்., எய்ட் நிறுவனம்; டிரம்ப் அடுத்த அதிரடி

மூடப்பட்டது யு.எஸ்., எய்ட் நிறுவனம்; டிரம்ப் அடுத்த அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்க அரசு சார்பில் உலகம் முழுவதும் செயல்பட்டு வந்த தொண்டு நிறுவனமான யு.எஸ்., எய்ட் தலைமையகம் மூடப்பட்டது.வாஷிங்டனில் உள்ள யு.எஸ்., எய்ட் என்னும் தொண்டு நிறுவனம் 1961ம் ஆண்டு ஜான் கென்னடி அதிபராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. சர்வதேச அளவில் மனிதாபிமான அடிப்படையில் ஆன உதவிப்பணிகளுக்காக, உருவாக்கப்பட்டது. இந்த தொண்டு நிறுவனத்தின் ஆண்டு பட்ஜெட் ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஆகும். இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் அளிக்கப்படுகிறது.இவ்வளவு பெரிய தொண்டு நிறுவனமான யு.எஸ்., எய்ட்,மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது.வாஷிங்டனில் உள்ள தலைமையகம் மூடப்பட்டதுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு இ.மெயிலில் கேட்டுக்கொள்ளப்பட்டனர். தலைமையகத்தின் சுவர்களில் உள்ள லோகோ மற்றும் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும் அதன் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டன.இந்த திடீர் நடவடிக்கைகளால்,இந்த தொண்டு நிறுவனத்தின் நிதி உதவி பெற்று நேரடியாகவும் மறைமுகமாகவும், பல்வேறு உலக நாடுகளில் வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.முன்னதாக, இந்த தொண்டு நிறுவனம் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார். அதை ஏற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுவனத்தை மூடுவதற்கு கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க் எக்ஸ் ஸ்பேசஸ் வலைதளத்தில் நடந்த உரையாடலில் கூறியதாவது:யு.எஸ்.ஏ.ஐ.டி., விஷயங்களைப் பொறுத்தவரை, நான் அதிபருடன் விரிவாக விவாதித்தேன். அதை மூட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். இந்நிலையில் டிரம்ப் ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்க அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகள் தேவை இன்றி இருப்பதாகவும், அதன் ஊழியர்களுக்கு வெட்டியாக சம்பளம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டிய அதிபர் டிரம்ப், திறன் மேம்பாட்டு துறை ஏற்படுத்தியுள்ளார். எந்தெந்த துறைகளை வைத்துக் கொள்ளலாம், எந்தெந்த துறைகளை மூடி விடலாம், இருக்கும் ஊழியர்களை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வதுதான் இந்த புதிய துறையின் வேலை.அதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க்கை நியமித்துள்ளார். இப்படி தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு துறையின் ஊழியர்கள், சில நாட்களுக்கு முன், யுஎஸ் எய்ட் தொண்டு நிறுவனத்துக்குள் சென்று ஆய்வு செய்ய முயற்சித்தபோது அதன் அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்வாறு தடுத்து நிறுத்திய அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் பணியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Senthoora
பிப் 04, 2025 08:53

நல்லது என்றாலும், எலான் மாக்ஸ் தான் இனி அமெரிக்காவை ஆளுவார்போல. எதோ நல்லது நடந்தால் நல்லது.


J.V. Iyer
பிப் 04, 2025 04:23

அருமை.. அருமை. ட்ரம்ப் அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு காத்திருக்கிறது. ட்ரம்ப் வாழ்க.


Rajan A
பிப் 04, 2025 01:12

நம்ம ஊர்லே செஞ்சா நல்லா இருக்கும்


சிவா. தொதநாடு.
பிப் 03, 2025 22:27

1970 களில் கேர் என்ற நிறுவனம் மூலம் காங்கிரஸ் அரசு கேவலமான ஒரு பவுடர் உணவு சப்ளை செய்தது.


Oru Indiyan
பிப் 03, 2025 22:26

மிகவும் நல்ல செயல். இதன் மூலம் புதிய கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை குறையும். .


Nandakumar Naidu.
பிப் 03, 2025 22:10

இந்தியாவிற்கு எதிராக செயல்படும் அரசியல்வாதிகள், தேச மற்றும்.சமூக விரோதிகள், ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்துக்களை எதிர்க்கும் அனைவரையும் இந்திய நாட்டில் இருந்து வெளியேறி அவர்களுக்கு பிடித்த நாட்டிற்கு செல்ல கடுமையாக உத்தரவிட வேண்டும். இவர்களுக்கு சாதகமாக செயல்படும் நீதிபதிகளையும் நாடு கடத்த வேண்டும்.


Svs Yaadum oore
பிப் 03, 2025 22:04

வெள்ளைக்காரனிடம் பிச்சை எடுத்து வாழ்ந்த இங்குள்ள மதம் மாற்றிகளின் வாழ்க்கை இனி கஷ்டம்தான் .....அந்த மதம் மாற்றி NGO பிச்சைக்காரர்களிடம் பிடுங்கி தின்று வாழ்க்கை நடத்திய விடியல் திராவிடனுங்களுக்கும் சம்மட்டி அடி


ManiK
பிப் 03, 2025 21:09

கன்வர்ஷன் கயவர் கும்பலுக்கு இது போல் மேலும் ஆப்பு வைக்கனும். இந்திய அரசு ட்ரம்ப் போல் இன்னும் அதிக தைரியமாக செயல்பட வேண்டும்.


Svs Yaadum oore
பிப் 03, 2025 20:58

வெள்ளைக்காரனிடம் பிச்சை எடுத்து வாழ்ந்த இங்குள்ள மதம் மாற்றிகளின் வாழ்க்கை இனி கஷ்டம்தான் .....


Haja Kuthubdeen
பிப் 04, 2025 11:49

அந்த வெள்ளை காரன் இன்று 300முன்னூறு இந்தியர்களை ராணுவ விமாணம் மூலம் அனுப்பி வச்சுட்டான்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை