உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்; சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது!

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்; சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 78, பதவியேற்ற உடன் மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார். 'சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அறிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=enam1nj1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் துவக்கி உள்ளனர். 3 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு வந்த 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இதுவரை சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் ராணுவ விமானத்தைப் பயன்படுத்தி நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கிஜன்
ஜன 24, 2025 22:22

அவரு நாட்டை காக்க அவர் பாடுபடுகிறார் .... முடிந்தால் இந்தியாவில் பண்ண வேண்டியது தானே ....


Ramesh Sargam
ஜன 24, 2025 21:03

ட்ரம்ப் ஆடும் ஆட்டத்தால் அவரை ஆதரித்தவர்களே ஏண்டாப்பா அவரை ஆதரித்தோம் என்று நொந்துகொள்வார்கள்.


Mohan
ஜன 24, 2025 19:14

எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க அப்பாவி அவர்களே நல்லா...லா .. நிறைய்..யத்தான் பொங்குறீங்க பாஜகவை நினைச்சு.... உங்க உடனடிப் பொங்..கலே உங்க எண்ணங்களை காட்டிக் கொடுக்கிறதே


அப்பாவி
ஜன 24, 2025 16:04

கர்ம்பூமி ஆளுங்களே அங்கே சட்ட விரோதமா பல லட்சக் கணக்கில் இருக்காங்களாம்.


Laddoo
ஜன 24, 2025 17:57

உனக்கேன்யா எரியுது?


புதிய வீடியோ