உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: அமெரிக்கா பரிசீலனை

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: அமெரிக்கா பரிசீலனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் குறைந்துவரும் குழந்தை பிறப்பை அதிகரிக்க செய்ய, பெண்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்கவிக்க, ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது.பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. இது அந்நாடுகளுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து, முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து, அந்நாட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக் கொள்வதை ஆதரிக்க அந்நாட்டு அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.அமெரிக்காவிலும் 1990களுக்கு பிறகு, குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்து காணப்படுகிறது. 2023 ம் ஆண்டு குழந்தைப் பேறு விகிதம் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 1.62 ஆக உள்ளது. இந்தப் பிரச்னை பெரிய பிரச்னையாக மாறும் என துணை அதிபர் ஜேடி வான்ஸ் எச்சரித்து உள்ளார். குழந்தை பெற்றுக்கொள்வதை அதிகரிக்க செய்ய வேண்டும் என எலான் மஸ்க் கூறியிருந்தார்.இந்நிலையில், இந்நிலையை மாற்றி, பெண்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதை ஆதரிக்க புதிய திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வரும் அதிகாரிகள், குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமெரிக்கா அளித்து வரும் 'ஸ்காலர்ஷிப்' திட்டத்தில், திருமணமாகி குழந்தை உள்ளவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pandi79
ஏப் 22, 2025 23:22

Medical bill for last kid , Csection bill 80K to 100K$ received. Due to insurance holding, paid just 7500 out of my pocket . it is Expensive . All my three kids are born in C-section


pandi79
ஏப் 22, 2025 23:22

Medical bill for last kid , Csection bill 80K to 100K$ received. Due to insurance holding, paid just 7500 out of my pocket . it is Expensive . All my three kids are born in C-section


Ramesh Sargam
ஏப் 22, 2025 20:14

குழந்தை பிறப்பு அதிகரிக்கவேண்டுமென்றால், அமெரிக்க அரசு இந்தியர்களுக்கும், பாக்கிஸ்தானியர்களுக்கும், சீனர்களுக்கும் குடியுரிமை கொடுக்கவேண்டும். கொடுத்த ஒரே வருடத்தில் குழந்தை பிறப்பு எதிர்பார்த்ததைவிட அதிகரித்திருக்கும்.


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 19:37

ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு ஒரு நாள் செலவே 5000 டாலர்கள் ..வேலைக்கு செல்லும் பெண்மணிகளின் குழந்தை காப்பகங்கள் வாங்கும் தொகை மாதம் 2500 டாலர்கள் ..18 வயது வரை பராமரிக்க ஒரு லட்சம் டாலர்கள் தேவை நாய் வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை குழந்தை வளர்ப்பதில் காட்டுவதில்லை


Barakat Ali
ஏப் 22, 2025 19:08

கால்ல சங்கிலி, கையில் காப்பு போட்டு அனுப்பாம அங்கேயே வெச்சிருந்தா எங்க ஆளுங்க ஹெல்ப் பண்ணியிருப்பாங்கள்ல ????


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 20:27

உங்காளுங்க கொசு மாதிரி இனப்பெருக்கம் செய்வது ஆசியா நாடுகளில் தான் ..அரபு நாடுகளில் இன்சென்டிவ் கிடைக்கும் ..


Keshavan.J
ஏப் 22, 2025 19:05

இந்த திட்டத்தால் பிரான்ஸ், பெல்ஜியம் ஹொலாந்து, சுவீடன், டென்மார்க் இங்கிலாந்து ஜெர்மனி நாட்டில் பெருத்த நஷ்டம். இந்த திட்டத்தால் பலன் அடைதவர்கள் வெள்ளையர்கள் அல்ல மூர்க்கர்கள் கூட்டம். EUROPE இல் உள்ள பிரச்சனை எல்லாவற்றிக்கும் காரணம் இந்த திட்டம் தான்


Keshavan.J
ஏப் 22, 2025 19:00

இந்த ஊக்க தொகையை மூர்க்கர்கள் கூட்டம் தான் அனுபவிக்கும். இது நஷ்டத்தில் தான் முடியும்


சமீபத்திய செய்தி