உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 18,000 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க அரசு திடீர் முடிவு

18,000 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க அரசு திடீர் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 18,000 இந்தியர்கள் உட்பட, 15 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த மாதம் 20ல் பதவியேற்க உள்ள நிலையில், அந்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என, டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.இதையடுத்து, அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை சார்பில், முறையான ஆவணங்கள் இன்றி தங்கள் நாட்டில் தங்கி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்து உள்ளது.இதில், அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்சிகோ, எல் சால்வடார் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, நம் நாட்டில் இருந்து மட்டுமே, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் முறைகேடாக குடியேறியதாக கூறப்படுகிறது.இதற்கான புள்ளி விபரங்களை, அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை கடந்த மாதம் வெளியிட்டது. இதன்படி, வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகபட்சமாக, அமெரிக்காவின் அண்டை நாடான ஹோண்ட்ராசை சேர்ந்த 2,61,651 பேர் உள்ளனர். இந்த பட்டியலில், 18,000 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.இவர்களை, அவரவர் சொந்த நாடுகளுக்கு தனி விமானம் வாயிலாக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சில நாடுகள் ஒத்துழைக்காததால், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

I Imam
டிச 16, 2024 13:04

சங்கிகளால் நாட்டுக்கும் வீட்டிற்க்கும் கேடு என்பதை அமெரிக்கா உணர்ந்து விட்டது,,,,,, அதனால் எடுத்த முடிவே இது,,,


Jay
டிச 15, 2024 20:42

சட்டவிரோதமாக வந்து தங்கி இருப்பவர்களை அங்குள்ள அரசாங்கம் விரட்டினால் அன்புள்ள எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். இதே போட்டோ விரோதமாக இந்தியாவுக்குள் வருபவர்களை வெளியே அனுப்ப நினைத்தாலோ அதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலோ காங்கிரஸ் மற்றும் திமுக கிளம்பி விடுவார்கள் சிறுபான்மையினர் ஆதரவு என்று..... இந்த நாடு எப்படி உருப்படும்?


வல்லவன்
டிச 15, 2024 19:31

அமெரிக்கா சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு ஒரு சொர்க்க புரி.. சட்ட திட்டங்களுக்கு முறையாக உட்பட்டு இங்கு வாழ்பவர்களுக்கு இது ஒரு நரகம்


AMLA ASOKAN
டிச 15, 2024 15:46

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 18000 நபர்கள் பற்றிய கவலைக்கு பதில் பர்மா , வங்கம் . பாக்கிஸ்தான் பற்றி தான் அதிக அளவில் விமர்சனங்கள் வருகின்றன . ஏன் இந்த முஸ்லிம்கள் மீதான வன்மம் , வெறுப்பு ? ஒரு மனிதனின் துன்பம் மற்றொருவனுக்கு இன்பமாய் இனிக்கிறது . என்ன அவலம்


Venkatesan Srinivasan
டிச 15, 2024 14:38

ஜாதி பார்த்து இல்லை. மதம் மட்டுமே பார்த்து. பாக்கிஸ்தானில் இந்து கிருத்துவ முஸ்லிம்கள் சீக்கியர்கள் உள்ளனர். பாக்கிஸ்தானியர் ஜாதி நமக்கு தெரியவேண்டியதில்லை. பங்களாதேஷிகள் இந்து முஸ்லீம் கிருத்துவர்கள் பெளத்த சமண என்று பல மதங்களில் உள்ளனர். இந்த நாடுகள் தங்களை இஸ்லாமிய - முஸ்லிம் தேசங்களாக அறிவிப்பு செய்தவை. அவை முஸ்லிம்கள் அல்லாத மக்களை கொடுமை செய்து விரட்டி அடிக்கின்றனர். அவ்வாறு விரட்டி விடப்பட்ட மக்கள் தங்கள் பூர்வ தேசமான இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வருகின்றனர். அதே சமயம் முஸ்லிம் பாக்கிஸ்தானியர் பங்களாதேஷிகளும் நல்ல சொகுசு வாழ்க்கை வேண்டி இந்தியாவிற்கு கள்ளக் குடியேறிகளாக வந்து இங்கு கலவரங்கள் உண்டு பண்ண முயற்சிகள் செய்கின்றனர். இத்தகைய கள்ளக் குடியேறிகளின் பாதுகாவலர் காஷ்மீரில் அப்துல்லா முப்தி குடும்பங்கள், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டு, திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், அவர்களின் அடிவருடி கட்சிகள். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


MOHAMED Anwar
டிச 15, 2024 12:57

இந்தியாவில் ஜாதி, மதம் பார்த்த்து விரட்டுகின்றனர், அமெரிக்கா விலோ அது பாராமல் விரட்டுகின்றனர்.


jayvee
டிச 15, 2024 12:23

அமெரிக்கா இதை செய்வதில் ஒரு தவறும் கிடையாது .. அதே சமயத்தில் இந்தியா இதை செய்தால் அமெரிக்கா மத சுதந்திரம் என்ற பெயரில் கூவவும் கூடாது.. இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகம், வட கேரளா மற்றும் பெங்களூரு, வட கர்நாடக, தெலுங்கானா, அசாம், மேற்கு வங்காளம், மும்பை மற்றும் புறநகர் பகுதிகள், ஹரியானாவில் சில பகுதிகளில் சட்டவிரோதமாக உள்ளூர் ஜமாத் மற்றும் கம்யூனிஸ்ட் திராவிட மம்தாவாதி அரசியல் வாதிகளின் ஆதரவுடன் தங்கியுள்ள பங்காளதேஷி மற்றும் ரோஹிங்கியா மக்களை அவர்களுக்கு போலி ஆதார்கார்ட் வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளும் உள்ளன உடனடியாக நாடு கடத்தவேண்டும்.. இவர்கள் மீண்டும் பங்களாதேஷ் எல்லையில் விடப்படவேண்டும்


saravan
டிச 15, 2024 12:15

முறையான ஆவணம் இன்று நுழைந்தவனுக்கும் இந்திய அரசுக்கும் என்ன சம்பந்தம் ... தவறு தவறு தான்


vijay,covai
டிச 15, 2024 11:29

கான்கிராஸ் ஆட்சி செய்தால் மட்டும் வெளிநாட்டுக்கு செல்ல தேவை இல்லையா


MOHAMED Anwar
டிச 15, 2024 10:57

அமெரிக்கா- வில் வாழ்வதை தவிர்| துபாய் சென்று வாழ். உன் வாழ்வு ஜொலிக்கும், உன் வாழ்க்கை இனிக்கும்.


MUTHU
டிச 15, 2024 13:04

துபாய்க்கு சட்ட விரோதமாய் சென்றால் திருப்பி அனுப்புமுன் seedless ஆக்கிவிடுவார்கள்.


M Ramachandran
டிச 15, 2024 17:20

அரேபிய துபை நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கழுத்துக்கள் மேஅல் கத்தி தொங்கி கொண்டிருக்கும். இங் மத சுதந்திரம் என்ற பெயரில் மத வெறி கும்பல் பெரும் பான்மையான மக்கள் மீது துவேஆக்ஷம் மாறும் தாக்குதல் நடந்து. அதற்க்கு ஒட்டு பொறுக்கிகள் காரணம். மக்கள் இந்த அரசியல் வாதிகள் இனம் கண்டு துடைத்து எரிய வேண்டும். ஆனால் மண்டூக மக்கள் நிலமைய அறியாது பிச்சை காசிற்கும் ஊட்டி கொடுத்து பிரியாணி அண்டாவாய் காட்டி வாய் பிளக்க வைத்து அந்த கூமுட்டையின் ஓட்டை பிடுங்கி கொள்கின்றனர்


முக்கிய வீடியோ