உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  அமெரிக்க - நைஜீரிய படைகள் தாக்குதல்: ஐ.எஸ்., அமைப்பின் முக்கிய தலைவர் பலி

 அமெரிக்க - நைஜீரிய படைகள் தாக்குதல்: ஐ.எஸ்., அமைப்பின் முக்கிய தலைவர் பலி

வாஷிங்டன்: அமெரிக்க -- நைஜீரிய படைகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையில், ஐ.எஸ்., அமைப்பின் முக்கிய தலைவர் நைஜீரியாவில் கொல்லப்பட்டார். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் லேக் சாட் என்ற பகுதியில், அமெரிக்க - நைஜீரிய படைகள் இணைந்து நேற்று கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன. இதில், தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., அமைப்பின் இரண்டாம் நிலை தலைவரான அபு - பிலால் அல் - மினுகி, 42, கொல்லப்பட்டார். இதை நைஜீரிய அதிபர் போலா டினுபும் உறுதி செய்தார். இது குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: என் வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க படையினர் நைஜீரிய படையினருடன் இணைந்து ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில், ஐ.எஸ்., முக்கிய தலைவர் மினுகி கொல்லப்பட்டார். இனி அவரால் மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

யார் இந்த மினுகி?

மேற்கு ஆப்ரிக்க ஐ.எஸ்., அமைப்பின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் அபு - பிலால் அல் - மினுகி. இவர், சாதாரணமானவர் அல்ல. மாறாக, மேற்கு ஆப்ரிக்க ஐ.எஸ்., அமைப்புக்கான நிதி ஆதாரம், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை ஒருங்கிணைக்கும் மூளையாக செயல்பட்டவர். ஆப்ரிக்கா முழுதும் உள்ள ஐ.எஸ்., பிரிவுகளுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றியவர். தீவிரவாத செயல்பாடுகளால், 2023ல், இவரை அமெரிக்கா பயங்கரவாதியாக அறிவித்ததுடன், நிதி பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தடைகளை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை