உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் - இஸ்ரேல் போரில் டிரம்ப் 2 வார காத்திருப்பின் அர்த்தம்; வெளியான புதிய பின்னணி

ஈரான் - இஸ்ரேல் போரில் டிரம்ப் 2 வார காத்திருப்பின் அர்த்தம்; வெளியான புதிய பின்னணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரான், இஸ்ரேல் இடையேயான போரில் தலையிட 2 வாரங்கள் அவகாசம் எடுத்துள்ள டிரம்ப் முடிவின் பின்னணியில் உள்ள விஷயங்கள் பற்றி புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.ஈரான், இஸ்ரேல் நாடுகளின் போர் இன்னமும் முடிவுக்கு வராமல் உள்ளது. நாட்கள் நகர, நகர மோதல் முன்பை விட வலுவாகும் என்றே தோன்றுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gpa601tc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போரை நிறுத்துவதில் அமெரிக்காவின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த தருணத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு வாரங்கள் வரை காத்திருப்பார் என்று வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இரண்டு வாரங்கள் என்ற டிரம்பின் முடிவின் பின்னணியில் பல்வேறு திட்டங்கள் அல்லது ராஜதந்திர நடவடிக்கைகள் இருக்கலாம் என்று சர்வதேச நாடுகளின் அரசியல் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்களின் கருத்தாக உள்ளது. அரசியல் மற்றும் வரலாற்று ரீதியாக கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை அவர்கள் உதாரணமாக கூறுகின்றனர்.அவர்கள் மேலும் கூறுவதாவது;நேட்டோ ராணுவம் கடாபிக்கு எதிராக அனுப்பப்பட்டு, அவர் கொல்லப்பட்டார். இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா குண்டுவீசி கொல்லப்பட்டார். இவ்விரண்டு சம்பவங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்தது. எனவே 2 வாரம் அமைதி அல்லது அவகாசம் என்று பெயரளவில் அறிவித்துவிட்டு, எந்நேரத்திலும் திடீரென அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். அமெரிக்காவின் தலையீடு எப்போது என்ற கேள்விகள் உலக நாடுகள் மத்தியில் பலமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதே வேளையில், இரண்டு வாரங்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளதாக இஸ்ரேல் நாட்டின் பிரபல நாளிதழ் ஹாரேட்ஸில் (Haaretz) கட்டுரைகள் எழுதும் கிடியேன் லெவி கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது; நெதன்யாகுவும், அவருடன் இருப்பவர்களும் அமெரிக்காவின் இந்த பின்வாங்கலால் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். டிரம்ப் சொல்லும் இரண்டு வாரங்கள் என்பது தற்போதைய யதார்த்தத்தில் முடிவில்லாதது. இரண்டு வாரங்கள் என்று அவர் சொல்வது ஏமாற்று வேலை. அது உண்மை என்றால் அமெரிக்கர்கள் இந்த போரில் ஈடுபடும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன எனலாம். ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் சேதப்படுத்துவதில் வெற்றி கண்டாலும், இஸ்ரேல் நாட்டினர் பாதுகாப்பாக உணர மாட்டார்கள். காரணம், ஈரான் இழந்த தனது திறனை மீண்டும் பெற்றுவிடும். காசா போன்ற பல பாதுகாப்பு பிரச்னைகள் இஸ்ரேலுக்கு தீரப் போவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
ஜூன் 21, 2025 07:12

அனைத்து அரபு நாடுகளுடனும் சுமூக உறவு என்று ஒன்று வரப்போவது போல ஒரு நாடகம் போட்டு மற்ற நாடுகள் இதில் ஈரானுக்கு ஆதரவாக ஒன்று சேர்வதை தாமதப்படுத்தினார் டிரம்ப்பர். பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவாக போரில் கலந்துகொள்ளக்கூடாது என்பதால்தான் ஆஸிம் முனீருக்கு தனி விருந்து. பாகிஸ்தான் அணுவாயுதக்கிடங்கை பாதி உடைத்து வைத்து இருக்கும் இந்தியாவை இன்னும் சிறிது விளையாட விட்டால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்பதை அறிவுறுத்தி இருக்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது. துருக்கியின் எர்டோகன் கூட அடுத்த விருந்துக்கு வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படலாம். ஆகவே முன்னேற்பாடு அமெரிக்க தரப்பில் பல மாதங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் அதை புரிந்துகொள்ளவில்லை. அவ்வளவுதான்.


Nathan
ஜூன் 21, 2025 03:50

அவன் ஒரு முளை வளர்ச்சி குன்றிய குழந்தை


மூர்க்கன்
ஜூன் 21, 2025 01:20

இந்த குழப்பத்தில் பாவம் இஸ்ரேல்??? பிடென் வேலை அதிகம். சத்தம் குறைவு. ட்ரம்ப் சத்தம் அதிகம் ஆனால் வேலை?? அல்சைமர்ல எல்லாமே மறந்து போச்சு? ஆமா நெதன்யாகு ன்னு சொல்லிட்டு ஒருத்தன போன் பண்ணுனானே அவன் யாரு??


karupanasamy
ஜூன் 21, 2025 03:22

ஈரான் வெகு விரைவில் மதசார்பற்ற ஜனநாயக நாடாக மலரும். இதை மாவீரன் நெதன்யாகு நிறைவேற்றிவைப்பர்.


Natarajan Ramanathan
ஜூன் 20, 2025 23:58

இரண்டு வாரங்களுக்குள் கமேனியை இஸ்ரேல் முடித்துவிடும் என்று உலகமே எதிர்பார்க்கிறது.


மூர்க்கன்
ஜூன் 21, 2025 23:30

அதுக்குள்ளே இஸ்ரேல் மடிந்து விடும்.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 20:53

டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபர் ஏற்றபிறகு பேசும் பேச்சுக்கள், செய்யும் செயல்கள் எல்லாம் ஏடாகூடமாக இருக்கிறது. அவர் உண்மையில் போரிடும் நாடுகளின் இடையே அமைதி நிலவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா, அல்லது நோபல் அமைதி பரிசுக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா, அல்லது தான்தான் எல்லோருக்கும் பெரிய அண்ணா என்று நினைத்து இப்படி செயல்படுகிறாரா...? அல்லது அவர் உடம்புக்கு ஏதாவது உடல்நல பிரச்சினையா? ஒன்றுமே புரியவில்லை. அவரும் குழம்பி, மற்றவர்களையும் குழம்பவைக்கிறார்.


Sivagiri
ஜூன் 20, 2025 20:46

சரிதான் - இரண்டு சைடுலயும் - ரெண்டு வாரம் சண்டை போடறதுக்குதான் ஆயுதம் , துட்டு இருக்கு , ரெண்டு பேரோட பவரும் குறைந்த பிறகு மூக்கை நுழைத்தால் யார் எவ்வளவு பலசாலி , யார் எவ்வளவு வீக் என்று தெரிஞ்சு போகும் - - அடிக்கிறதும் ஈஸி , ஏரியாவுல பல டீலிங் பேசி முடிக்கிறதும் ஈஸி . . .


Karthik
ஜூன் 21, 2025 05:48

ஆம் கரெக்டா சொன்னீங்க.. அமெரிக்கா தற்போது பொருளதார சிக்கன நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. மேலும் ட்ரம்புக்கும் நோபல் பரிசு மாதிரி பரிசுகளையும், பல பேரும்-புகழும் அடைய பேராசையை கொண்டு திரிகிறார். எனவே எதிரி பலவீனமான பிறகு மூக்கை நுழைத்தால் இழப்போ / செலவோ அமெரிக்காவிற்கு குறைவாக இருக்கும். அதனால் அமெரிக்கா அடைய போகும் லாபமோ பெரிது. கனிம வள ஒப்பந்தம், எதிரியை கட்டுப்படுத்துவது, ஆயுத வியாபாரம், பெயர் புகழ் இன்னும் பல.. எல்லாம் ஒரு லாப நோக்கமே..


புதிய வீடியோ