உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தல்; ஆசிய வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு!

அமெரிக்க அதிபர் தேர்தல்; ஆசிய வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளிக்க இருக்கும் ஆசிய, ஆப்பிரிக்க வாக்காளர்கள் மற்றும் ஹிஸ்பானிக் வாக்காளர்கள் மத்தியில், கமலா ஹாரிஸ் செல்வாக்கு அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். அமெரிக்க தேர்தல் களம் எப்படி இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் பிற நாடுகளை பிறப்பிடமாக கொண்ட வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது. யாருக்கு ஓட்டளிக்க, மக்கள் காத்திருக்கின்றனர் என்பது குறித்து ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:அமெரிக்காவின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 24.6 கோடி. இதில், 3.62 கோடி வாக்காளர்கள், மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து குடியேறிய, ஸ்பானிஷ் மொழி பேசக்கூடிய ஹிஸ்பானிக் சமூகத்தினர். இவர்கள் மட்டுமே வாக்காளர்களில் 14.7 சதவீதம் பேர் உள்ளனர்.* கறுப்பின சமூகத்தை சேர்ந்தவர்கள், 3.4 கோடி வாக்காளர்கள். இது 14 சதவீதம். * ஆசியாவை சேர்ந்தவர்கள் 1.5 கோடி வாக்காளர்கள். இது 6.1 சதவீதம்.

அதிபர் தேர்தல்

ஆசிய- அமெரிக்கர்கள் மத்தியில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அதிகம் தென்படுகிறது. இவர்களில் 46 சதவீதம் பேர் பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். அவர் தேர்தல் களத்தில் இருந்து விலகி, கமலா ஹாரிஸ் களம் இறங்கிய நிலையில், அவருக்கு ஓட்டளிக்க விரும்புவோர் சதவீதம் 64 ஆக அதிகரித்துள்ளது.* இந்தியர்களில் 46 சதவீதம் பேர், பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். தற்போது கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க விரும்புவோர் 69 சதவீதம் பேராக அதிகரித்துள்ளது.* பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களில் 40 சதவீதம் பேர், பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். தற்போது கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க 68 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.* ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்களில் 54 சதவீதம் பேர், பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். தற்போது கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க 65 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்தனர்.* சீனாவை சேர்ந்தவர்களில் 54 சதவீதம் பேர், பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க , 65 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.* கொரியாவை சேர்ந்தவர்களில் 49 சதவீதம் பேர், பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க 62 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்தனர். ஆய்வறிக்கைப்படி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் களத்தில் இருந்ததை விட, கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கிய போது தான் ஓட்டுச்சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனநாயக கட்சிக்கு மக்கள் ஆதரவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.கமலா ஹாரிஸ் vs டொனால்டு டிரம்ப். மக்கள் யாருக்கு ஓட்டளிக்க விருப்பம், சர்வே முடிவுகள் பின்வருமாறு:* இந்தியர்களில் 69 சதவீதம் பேர், கமலா ஹாரிசுக்கும், 25 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஓட்டளிக்க விரும்புகிறார்கள்.* சீனாவை சேர்ந்தவர்களில், 65 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 24 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஓட்டளிக்க விரும்புகிறார்கள்.* பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களில், 68 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 28 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஓட்டளிக்க விரும்புகிறார்கள்.* ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்களில், 67 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 27 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஓட்டளிக்க விரும்புகிறார்கள்.* கொரியா நாட்டை சேர்ந்தவர்களில், 62 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 35 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஓட்டளிக்க விரும்புகிறார்கள்.* வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களில், 77 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 20 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஓட்டளிக்க விரும்புகிறார்கள் என்பது சர்வே முடிவில் தெரியவந்தது.இத்தகைய சர்வே முடிவுகளுக்கு முக்கிய காரணம், வெளிநாடுகளை சேர்ந்தோர், அமெரிக்காவில் குடியேறுவதற்கு டிரம்ப் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவது தான். டிரம்ப் ஆதரவு கோஷ்டியினர், குறிப்பாக எலான் மஸ்க் போன்றவர்கள், பிற நாட்டினர் அமெரிக்காவில் குடியேறவும், வேலைக்கான விசா வழங்கவும், கடும் எதிர்ப்பு ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இதுவே, பிற நாட்டு வாக்காளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸ்க்கு செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shanker
அக் 12, 2024 11:54

கமலா ஹாரிஸ் வருவது அமெரிக்காவிற்கும் நல்லதல்ல உலகத்திற்கும் நல்லதல்ல. இந்த நான்கு வருடத்தில் அவர்கள் செய்த அட்டுழியங்கள் ஏராளம். உலகமே போர் மயமாக உள்ளது.


Thanu Srinivasan
அக் 12, 2024 07:28

டொனால்ட் ட்றம்ப் சொல்வதில் தவறு இல்லை. ஹிப்பானிக்ஸ்களில் பெரும்பாலோரும் நல்ல குடிமக்ககள் அல்ல. இந்தியாவிலிருந்து குடியேறிய சில சில்லறைகளும் அவ்வாறே. மீனாகந்தசாமி, தேன்மொழி சௌந்திரராஜன் போன்றவர்கள் அங்கேயும் ஆரியன்-த்ராவிடன் என்ற பிளவை ஏற்படுத்துகின்றனர். த்ராவிட சிந்தனையுள்ள புல்லுரிவிகளுக்கு விசா வழங்ககூடாது