உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பளாராக டிம் வால்ஸ் பெயரை கமலா ஹாரிஸ் அறிவித்தார்.நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இன்று ( ஆக.,06) அறிவிக்கப்பட்டார். அதன் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண கவர்னர் டிம் வால்ஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை கமலா ஹாரிஸ் நியமனம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.60 வயது டிம் வால்ஸ், முன்னாள் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். மாகாண எம்.பி.யாக பதவி வகித்து பின் கவர்னராக பணியாற்றி வருகிறார். தற்போது துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை