உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் திக்...திக்... தேர்தல்; சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வரும்!

அமெரிக்காவில் திக்...திக்... தேர்தல்; சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வரும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் திக்...திக்... மனநிலையுடன் எதிர்கொள்ளும் அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது. இதன் மூலம், பல மாதங்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வருகிறது.உலகின் வலிமை மிக்க ஜனநாயக நாடு அமெரிக்கா. இங்கு, 1788ல் துவங்கி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு, அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று (நவ.,05) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் நாட்டு மக்களுக்கு கூறியதாவது:கடினமாக உழைக்கும் தேசபக்தர்கள் நாட்டைக் காப்பாற்ற போகிறார்கள். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மீட்க தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறேன். எனது தலைமையின் கீழ், பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக்குவோம்.நான்கு வருடங்கள் காத்திருந்தேன். நீங்கள் எனக்கு ஓட்டளிக்க வேண்டும்.

பொருளாதாரம்

கமலாவின் நான்கு வருடங்கள் ஆட்சியில், அமெரிக்க தொழிலாளர்களுக்கு பொருளாதார நரகத்தைத் தவிர வேறு ஏதும் வழங்கவில்லை. கமலா ஹாரிஸ் ஒரு தீவிர இடது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். அவர் நமது பொருளாதாரத்தை அழித்துவிட்டார். இவ்வாறு டிரம்ப் கூறினார். இதேபோல, மற்றொரு போட்டியாளரான கமலா ஹாரிஸும் வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.இரு வேட்பாளர்களும் மிகக்கடுமையாக மோதிக்கொண்ட தேர்தல் இது. தேர்தலில் தோற்றால், டிரம்ப் தரப்பினர் வன்முறையில் ஈடுபடுவர் என்ற எண்ணம், ஜனநாயக கட்சியினர் மத்தியிலும், வெளிநாடுகளை சேர்ந்தோர் மத்தியிலும் இருக்கிறது. இதனால் அமெரிக்க மக்கள் திக்...திக்... மனநிலையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Suppan
நவ 05, 2024 15:15

இருபத்து நாலு நாட்களானாலும் ஆகும். அதுதான் அமெரிக்க தேர்தல் முறை


Narasimhan
நவ 05, 2024 12:23

அமெரிக்காவுக்கு பிரசவ வலி வந்து விட்டது. இன்னும் இருபத்து நான்கு மணியில் ஆணா பெண்ணா என்று தெரியும்


Palanisamy Sekar
நவ 05, 2024 10:55

ட்ரம்ப் கோபக்காரர் தவிர குறை சொல்லமுடியாத நல்லவர்தான். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்ற அரசியல்வாதி அல்ல அவர். அவர்தான் வெல்வார். திக் திக் எல்லாம் தேவையே கிடையாது. நேர்மையான சுதந்திரமான தேர்தல் முறையை ட்ரம்ப் விரும்புபவர். கமலா பாணியில் பிரச்சாரம் செய்தால் எல்லோருக்குமே திக் திக் தான்.


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 09:27

சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வராது. தேர்தல் முடிவு தெரிவதற்கு 3 அல்லது 4 நாட்கள் ஆகும்.


Bye Pass
நவ 05, 2024 08:32

திருமங்கலம் பாணியில் தேர்தல் நடத்த முடியாது


Azar Mufeen
நவ 06, 2024 10:59

சூரத், இந்தூர் பாணியில் தேர்தல் நடத்த முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை