உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தல்: பெரும்பான்மையை கடந்து டிரம்ப் கட்சி வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தல்: பெரும்பான்மையை கடந்து டிரம்ப் கட்சி வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், டொனால்டு டிரம்ப்பின் குடியரசு கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை கடந்து 277 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 226 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கியது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78), ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்(60), போட்டியிடுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8mqtxqxm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தேவை 270

ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், இன்டியானா, கென்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 270 தொகுதிகளில் வெற்றி தேவை. தற்போதைய நிலவரப்படி,டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை கடந்தார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், வெர்மான்ட், மாசசூசெட்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களி்ல், 226 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின்தங்கி உள்ளார். தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதிபர் தேர்தலுடன் அமெரிக்க செனட் சபைக்கான தேர்தலும் நடந்தது. இதில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. தேர்தலில், டிரம்பின் குடியரசு கட்சி வேட்பாளர்கள், பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களில் வெற்றி பெற்று விட்டனர். கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சியினர் 43 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.அதேபோல், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் டிரம்பின் குடியரசு கட்சி 186 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது, கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 160 இடங்களில் வென்றுள்ளது. பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

karthik
நவ 06, 2024 16:27

நல்லது..


Suppan
நவ 06, 2024 13:44

சென்செக்ஸ் டிரம்பின் வெற்றியை எதிர்பார்த்து நேற்றிலிருந்து ஏறுமுகம். இன்றும் ஏறிக்கொண்டுதான் உள்ளது.


நிக்கோல்தாம்சன்
நவ 06, 2024 12:28

எந்த அதிபர் வந்தாலும் உலகை அழிக்கப்பிறந்தவர்கள் அமெரிக்கர்கள் என்ற எனது கருத்துக்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும் ,


Duruvesan
நவ 06, 2024 12:26

பாசிசம் வென்றது, தமிழன திராவிடம் தோற்றது, சரி இல்லை


aaruthirumalai
நவ 06, 2024 12:20

வாழ்க வளர்க! வாழ்த்துக்கள்!!


r ravichandran
நவ 06, 2024 11:56

மோடிக்கும், டிரம்புக்கும் நல்ல புரிதல், நட்பு ஏற்கனவே உண்டு. அந்த வகையில் டிரம்ப் வெற்றி பெறுவது நல்லது தான். தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேல் தான்.


Duruvesan
நவ 06, 2024 11:50

விடியல் சார், ராவுல் சார் இப்போ EVM மூலம் மோடியின் நண்பர் வெற்றின்னு அறிக்கை விடுவாங்க


Gopalakrishnan Thiagarajan
நவ 06, 2024 11:49

கமலா ஹாரிஸ் தேர்வு ஆனால் பாரததுக்கு பெரும் கேடாக அமையும். ஆப்பிரிக்க பின் புலமும் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்மும் நம் நாட்டுக்கு எதிராக அமையும்.


Yaro Oruvan
நவ 06, 2024 11:33

சென்ற முறை ட்ரம்ப் தோல்வியை சந்தித்த போது மோடியின் தோல்வி மோடி அவர் தோல்வின்னு கூப்பாடு போட்ட அடிமை உப்பிஸ் மற்றும் கான்+கிராஸ் கும்பல் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. அமெரிக்க ஆள் இந்தியர்கள் மிக தெளிவாக இந்தியாவுக்கு நண்பனாக ட்ரம்ப்க்கு வாக்களித்துள்ளனர்.. கமலா ஹாரிஸ் கட்சி நம்மூர் திருடர் முன்னேற்ற கழகம் போன்றது.. அதாவது நாட்டு நலனில் அக்கறை கிடையாது .. மாறாக வந்தேறிகளின் ஓட்டுக்காக என்னவேண்டுமானாலும் செய்யும் கட்சி டெமாக்ரட்டிக் கட்சி.. தெளிவா சொல்லனும்னா கமலா ஹாரிஸ் கட்சி அமெரிக்க திமுக.. ட்ரம்ப் வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் நல்லது.. ஏன் உலகத்துக்கே நல்லது தீவிரவாதிகளை ஆதரிக்கும் மத மக்களை தவிர அனைவருக்கும் நல்லது... நம்ம தல அங்க போச்சி .. அமெரிக்க திமுக கவுந்துருச்சி .. ஸ்வீட் எடு கொண்டாடு ... அடிமை உப்பிஸ் ஒரு பயபுள்ளயும் காணோம் ?? எசமான் சொல்லீருப்பாரு .. எல்லாவனுக்கும் படிக்காசு 200 வந்துரும்.. யாரும் வெளில வரப்புடாது.. மூலைல குந்திக்கினு அழணும்னு.. உப்பிஸ் 200 வந்துச்சா ? வந்துச்சா ?


Ramesh Sargam
நவ 06, 2024 11:32

ட்ரம்பின் வெற்றி அமெரிக்கர்களுக்கு கொண்டாட்டம். இந்தியர்கள் மற்றும் வேறு பல நாட்டவர்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம்.


முக்கிய வீடியோ