வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மேலும் செய்திகள்
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க துாதர் செர்ஜியோ
24-Aug-2025
வாஷிங்டன்: 'குவாட்' தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வர வாய்ப்பில்லை என, செய்தி வெளியாகியுள்ளது. சர்வதேச உறவுகளை பேணும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் இணைந்து, 2007ல் துவங்கிய அமைப்பு தான் குவாட். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். எனினும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே குவாட் உருவாக்கப்பட்டதாக கூறுவதுண்டு. இதனால், சீனா தீவிரமாக எதிர்த்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்றிருந்தபோது, டெலாவரில் நடந்த நான்காவது குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அடுத்த உச்சி மாநாட்டை இந்தியா நடத்த வேண்டும் என, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டார். இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதன்படி, 2025 குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவில் நடக்கும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது சந்தேகம் தான் என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசோ, வெள்ளை மாளிகையோ இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
24-Aug-2025