உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்

டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்க அதிபரான பின்னர் டிரம்ப் செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.அதன் முக்கிய கட்டமாக, கல்வித்துறையில் இருக்கும் 1300க்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் டிரம்பின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன.இந்நிலையில், கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. டிரம்பின் செலவின குறைப்பு நடவடிக்கைக்கு பாஸ்டன் நீதிமன்றம் தடை பிறப்பித்து இருந்தது.ஆனால் தற்போது அந்த தடை உத்தரவை தகர்க்கும் வகையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம், பணியாளர்களை நீக்க ஒப்புதல் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அனுமதியை வரவேற்றுள்ள டிரம்ப், நாடு முழுவதும் உள்ள பெற்றோர், மாணவர்களுக்கு நன்றி என்று கூறி உள்ளார். மேலும் தனது நிர்வாகம் எடுக்க இருக்கக்கூடிய சில முக்கிய சீர்திருத்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்றும் இந்தியன்
ஜூலை 15, 2025 17:09

டிரம்ப் டிஸ்மிஸ் செய்யப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று இந்த செயல் காண்பிக்கின்றது


V K
ஜூலை 15, 2025 16:54

இது எல்லாம் எப்போ இந்தியாவில் அதுவும் குறிப்பா தமிழ்நாட்டில் நாடாகும்?


Ramesh Sargam
ஜூலை 15, 2025 12:55

செலவீனங்களை குறைக்க இப்படி ஆயிரக்கணக்கில் பணியில் உள்ளவர்களை பணியிலிருந்து நீக்கினால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்கள் எங்கே போவார்கள்? வீதிகளில் JOBLESS, HOMELESS, HELP ME என்கிற பதாகைகளை வைத்துக்கொண்டு அவர்களும் யாசகம் செய்யவேண்டியதுதான். இதைத்தான் அதிபர் டிரம்ப் விரும்புகிறாரா? வேலைவாய்ப்பை அதிகரித்து மக்களுக்கு உதவி செய்ய திட்டங்கள் எதுவும் அவரிடம் இல்லையா?


V Venkatachalam
ஜூலை 15, 2025 13:54

அரசு பணம் என்றால் தன் வீட்டு பணம் என்று நினைக்குறவனுங்களுக்கு தான் இந்த உத்தரவு.


Sekar Times
ஜூலை 15, 2025 12:44

இந்தியாவிலும் கல்வித்துறையில் தெண்ட சம்பளம் வாங்கும் மனசாட்சி மரத்துப்போன ஜென்மங்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். என்ன செய்ய


ASIATIC RAMESH
ஜூலை 15, 2025 10:13

பார்த்து பணிநீக்கம் செய்யுங்க பாஸ்... இங்கும் உரிய நேரத்தில் வேலையே செய்யாமல் அரசு ஊதியத்தில் சொகுசாக இருக்கிறவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்... அப்புறம் இன்னொரு விஷயம்.... அரசு செலவுகளை குறைப்பதாக நினைத்து உங்கள் பதவியை நீங்களே மறந்துபோய் உத்தரவு போட்டுறாதீங்க... கையெழுத்து போடும்போது எச்சரிக்கையா இருங்க...


Jack
ஜூலை 15, 2025 10:04

சடலம் அதிக எடையுடன் இருப்பதாக உணர்ந்த சுமப்போர் முடிகளை அகற்றினால் எடை குறையுமே என்று எண்ணியதை போல இவர் முடிவு ...உலகம் முழுக்க ராணுவ தளங்களும் ஆயுதங்களும் வைத்துக்கொண்டு கல்வி துறையில் கஞ்சத்தனம் செய்வது சரியல்ல


சமீபத்திய செய்தி