உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சைபர் தாக்குதலால் முடங்கியது அமெரிக்க பாதுகாப்பு முகமை

சைபர் தாக்குதலால் முடங்கியது அமெரிக்க பாதுகாப்பு முகமை

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் ரகசிய தகவல் தொடர்பு, `நெட்வொர்க்' எனப்படும் வலைப்பின்னல், திடீரென முடக்கப்பட்ட நிலையில், இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக, தொழில்நுட்பக் கோளாறு மற்றும் இணைய தாக்குதல்களால், பல முக்கிய சேவைகள் முடங்கி. குறிப்பாக, விமானப் போக்குவரத்து, வங்கி சேவைகள் முடங்கின. பல முக்கிய இணையதளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இந்நிலையில், என்.எஸ்.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு முகமை, தன் ஊழியர்கள் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், உள்நாட்டுத் தொடர்புகளுக்கும், `என்.எஸ்.ஏ., நெட்' என்ற பிரத்யேக நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகிறது. இந்த ரகசிய நெட்வொர்க் நேற்று திடீரென செயல்படாமல் முடங்கியது. இது, சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. * ஏ.ஐ., காரணமா? உலக நாடுகளையும் நிறுவனங்களையும் அச்சுறுத்தும் வகையில், சைபர் குற்றவாளிகள் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிவேக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ., எச்சரித்துள்ளது. குறிப்பாக, 'ஆர்டெக்ஸ்' எனப்படும் அதிநவீன ஏ.ஐ., ஊடுருவல் தளத்தை பயன்படுத்தி, வெறும் 3 மணி நேரத்திற்குள் தரவுகளைத் திருடுவதாக, எப்.பி.ஐ., கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ