உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரே நாளில் 1,300 பேருக்கு கல்தா அமெரிக்க வெளியுறவு துறை அலப்பரை

ஒரே நாளில் 1,300 பேருக்கு கல்தா அமெரிக்க வெளியுறவு துறை அலப்பரை

வாஷிங்டன்:சீர்திருத்தம் மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில், ஒரே நாளில், வெளியுறவுத் துறையில் உள்ள 1,300 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து, அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்; அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக்குவேன் என்று கூறி, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, நிர்வாக சீர்திருத்தம், செலவு குறைப்பு தொடர்பான பல அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார்.வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுக்கான கடன்களை நிறுத்துவதும், மானிய திட்டங்களை நிறுத்துவதும் இதன் ஒரு பகுதியாகும். இதற்காக பல துறைகளை முழுமையாக கலைப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார்.வெளியுறவுத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தார். அதன்படி, 1,50-0க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே விருப்ப ஓய்வு பெற்று சென்றுவிட்டனர்.இதன் தொடர்ச்சியாக, தேவையில்லாததாகக் கூறி பல பணியிடங்களை, பதவிகளை நீக்கி, அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். அதன்படி, வெளியுறவுத் துறையில் அமெரிக்காவில் பணியாற்றிய 1,107 பேர், வெளிநாடுகளில் பணியாற்றும் 246 பேர் என, 1,353 பேரை பணிநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.அடுத்து, 'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி துறையில், 2,000க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை