உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனா பொருட்களுக்கு பரஸ்பர வரி; அதிபர் டிரம்ப் பேச்சு

ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனா பொருட்களுக்கு பரஸ்பர வரி; அதிபர் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: 'ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும்' என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க பார்லிமென்டில், எதிர்க்கட்சி அமளிக்கிடையே, கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவின் பொற்காலம் துவங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக உழைத்து வருகிறோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xp0lfg76&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் உத்வேகம், பெருமை, நம்பிக்கை மற்றும் உற்சாகம் திரும்பி உள்ளது. ஜனவரி 20ம் தேதி பதவியேற்றதிலிருந்து வெறும் ஆறு வாரங்களுக்குள் கிட்டத்தட்ட 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு உள்ளேன். 400 நிர்வாக நடவடிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன்.

சாதித்து விட்டோம்

அமெரிக்கா திரும்பி வந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் மற்றவர்கள் செய்ததை விட 43 நாட்களில் நாம் அதிகமாக சாதித்துள்ளோம். ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும். அமெரிக்கா மீது மற்ற நாடுகள் விதிக்கும் எந்தவொரு வரிகளுக்கும் அமெரிக்கா சமமான நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுக்கும். வரிகள் அமெரிக்காவை மீண்டும் மீண்டும் பணக்காரர்களாகவும், சிறந்தவர்களாகவும் மாற்றுவதாகும். ஐரோப்பிய நாடுகள், சீனா, பிரேசில், இந்தியா மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட கணிசமாக அதிக வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. இந்தியா நம்மிடம் 100 சதவீத வரிகளை வசூலிக்கிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், நாம் அவற்றுக்கு வரி விதிப்போம்.

பாராட்டு

ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன என்பதை அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாற்றும் உத்தரவில் நான் கையெழுத்திட்டேன். 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பணவீக்கத்தை நாங்கள் சந்தித்தோம். எலான் மஸ்க் கடினமாக உழைத்து வருகிறார். இவ்வாறு டிரம்ப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு டிரம்ப் ஆற்றிய முதல் உரையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
மார் 05, 2025 16:22

அமெரிக்க டாலர் 26.50 டிரில்லியன் அதாவது ரூ 231,292,000 கோடி கடனில் உலகில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. இப்படியெல்லாம் வரி விதித்தால் தன் பிழைக்க முடியும். மக்கள் ஜனத்தொகை 34 கோடி . இந்தியாவின் கடன் ரூ 18,140,000 கோடி 143.53 கோடி மக்கள் தொகை டாஸ்மாக்கினாடு கடன் ரூ 950,000 கோடி இன்று 2021 ல் ரூ 530,000 கோடி பழனிசாமி ஆட்சியில் 4 வருட நாசமாப்போன ஸ்டாலின் ஆட்சியில் ரூ 420,000 கோடி கடன் அதிகம் ஜனத்தொகை 8.2 கோடி


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 05, 2025 16:14

டிரம்ப் தனது சில உத்தரவுகளை இன்னும் மூன்றே மாதங்களில் வாபஸ் வாங்குவார் என்கிறார்கள் .....


Karthik
மார் 05, 2025 20:24

வாய்ப்பிருக்கு ராஜா..


Gnana Subramani
மார் 05, 2025 14:38

ஒன்னும் பிரச்னை இல்லை. ஜி ஒரு போன் பண்ணினால் போதும். ட்ரம்ப் எல்லா வரியையும் வாபஸ் வாங்கி விடுவார்.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
மார் 05, 2025 18:56

சுப்புர மணி, எப்பிடி உங்க கருணாநிதி மரினா பீச்சில் 2 மணிநேர உண்ணாவிரத நாடகம் மாதிரியா? எவ்ளோ அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டார்கள்?


ஆரூர் ரங்
மார் 05, 2025 10:24

கண்டபடி இறக்குமதி வரி விதித்தால் உங்க நாட்டில் விலைவாசி உயரும். உடனடியாக எல்லாவற்றையும் உள்நாட்டில் தயாரிப்பது நடவாத காரியம். உங்க மோசமான முடிவுகளால் உங்களுக்கும் இழப்பு. உலகப் பொருளாதாரத்துக்கும் இழப்பு.


Karthik
மார் 05, 2025 20:28

எவன் வீட்ல எழவு விழுந்தால் எனக்கென்ன..?? நான் யுஎஸ் மட்டும் நல்லாயிருக்கணும். வேறென்ன..???


Nallavan
மார் 05, 2025 10:04

வரி, வட்டி, கிஸ்தி...யாரை கேட்கிறாய் வரி ...எதற்கு கேட்கிறாய் வரி.. வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..உனக்கேன் கட்ட வேண்டும் வரி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா? எதற்கு கொடுக்க வேண்டும் வரி


RK
மார் 05, 2025 11:34

அப்போ நீங்கள்.. ஐபோன்தான் வேணும் என்று இருக்க கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை