உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவுக்கான வரி முடிவாகவில்லை அமெரிக்க துணை அதிபர் தகவல்

சீனாவுக்கான வரி முடிவாகவில்லை அமெரிக்க துணை அதிபர் தகவல்

நியூயார்க்:ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவிற்கு வரி விதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் கூறியுள்ளார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக இந்தியாவிற்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், சீனா 47 சதவீதத்தை வாங்கி முதல் இடத்தில் உள்ளது; ஆனால், சீனாவுக்கு கூடுதல் வரி விதிக்கவில்லை. “ரஷ்யாவில் நிலவும் சூழ்நிலைகளுக்கும், சீனாவுடனான உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால், சீனா மீது வரி விதிப்பது சிக்கலானது. அது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் எந்த முடிவையும் எடுக்கவில்லை,” என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி