உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவது 38% குறைந்தது

இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவது 38% குறைந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க பல்கலைகளில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா, நடப்பாண்டில் 38 சதவீதம் குறைந்துள்ளது.அமெரிக்காவில் உள்ள பல்கலைகளில் படிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு, எப் - 1 என்ற விசா வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களே இந்த விசாவை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வழங்கப்பட்டுள்ள விசா குறித்த தகவல்களை, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில், 64,008 விசாக்கள் மட்டும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல்

கடந்தாண்டில் இதே காலகட்டத்தில், 1,03,495 விசாக்கள் வழங்கப்பட்டன. இதன்படி, நடப்பாண்டில், 38 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2020ல் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது, 6,646 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டது. அதே நேரத்தில், 2021ல் 65,235 மற்றும் 2022ல் 93,181 விசாக்கள் வழங்கப்பட்டன. அவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளது.அதிகளவு மாணவர்களை அனுப்பும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவும், எட்டு சதவீதம் குறைந்துள்ளது. கடந்தாண்டு, 80,603 விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு, 73,781 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவை விட சீன மாணவர்களுக்கு இந்தாண்டில் அதிக எண்ணிக்கையில் விசா கிடைத்துள்ளது.

இந்தியா முன்னேற்றம்

அதே நேரத்தில் அமெரிக்காவில் படிக்கும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில், சீனாவை இந்தியா முந்தியுள்ளது. கடந்தாண்டில், 2,68,923 என்ற அளவில் இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 3,31,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சீன மாணவர்களின் எண்ணிக்கை, 2,89,526ல் இருந்து, 2,77,398 ஆக குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
டிச 11, 2024 20:40

இது அமெரிக்க டீப் ஸ்டேட் செய்யும் சதி. இந்தியர்களை படிக்க விடாமல் தடுக்குது.


Sampath Kumar
டிச 11, 2024 08:20

அமெரிக்கா மொக்கம் குறையாத நம் மக்கள் அங்கே படித்து அங்கே தான் வேலை யவர்கள் இந்திய வரமாட்டார்கள் அங்கே படித்து விட்டு இங்கே வந்தால் இங்கு உள்ள தொழில் நுட்பத்தில் அவர்கள் அடித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காது ஆக பிஜேபி அரசு மாணவர்களுக்கு உதவும் வைகையில் கல்வி முறையை மாற்ற வேண்டும் குலகல்வி முறை அல்ல என்பதை சங்கிகள் புரிந்து கொள்ளவேண்டும் தொழில் நுட்பத்தில் முனாரா வேண்டும் என்றால் அதி நவீன தொழில் நுட்ப கல்வி வேண்டும் ஹரிக்கு கல்வி ஆர்வலர்கள் முன் வர வேண்டும் அதை செய்தல் தான் இந்த நடவு உருப்படும் சும்மா பலம் பெருமை பேசி பிரோச்சனம் இல்லை


Gokul Krishnan
டிச 11, 2024 09:18

சமச்சீர் கல்வி படித்தால் மட்டுமே வேலை கிடைத்து விடுமா அந்த சமச்சீர் கல்வியும் பொது மக்கள் குழந்தைகளுக்கு மட்டும் தான்


Kumar Kumzi
டிச 11, 2024 09:58

பார்ர்ரா ஓசிகோட்டர நக்கி நக்கி மண்டை துருப்புடிச்ச துண்டுசீட்டு கொத்தடிமை படிப்பை பற்றி கருத்து சொல்லுறான்யா ஹாஹாஹா


ஆரூர் ரங்
டிச 11, 2024 11:19

99 சதவீத விவசாயிகள் பரம்பரையாக விவசாயத்தை குலக்கல்வியாக கற்று பிழைப்பவர்களே. அவர்களையெல்லாம் வேறு தொழில்களுக்கு மாற வலியுறுத்துவீரா? அப்படி 60 கோடி விவசாய இளைஞர்களுக்கு அறிவியல், என்ஜினீயரிங் கல்வி அளித்து வேலைவாய்ப்பு அளிக்க விடியல் INDI கூட்டணியால் முடியுமா? போகாத ஊருக்கு வழிகாட்டி ஏமாற்றுவது திராவிட 21 ம் பக்க பரம்பரை டெக்னிக்.


VENKATASUBRAMANIAN
டிச 11, 2024 08:18

இங்கே இல்லாத படிப்பா. அயல்நாட்டு மோகம்.


பாமரன்
டிச 11, 2024 08:03

ஹைய்யா... சமீபத்தில் இரண்டாவது முறையாக சீனாவை முந்திட்டோம்... முதலில் மக்கள் தொகையில்... இப்போ மாணவர்களை அமிரிக்கா அனுப்பி அவனுவளுக்கு கூலி வேலை பார்த்து கொள்ளை காசு படிப்புங்கிற பேரில் வருமானமா குடுப்பதில்... எல்லாத்துக்கும் காரணம் எங்க ஜி யின் பொற்கால ஆட்சி தான்... ஆக்சுவலா நம்ம பகேடாஸ்க்கு ஒரு பாயிண்ட் எடுத்து குடுக்கறன் நானு... இந்தியாவில் கல்வி தரம் திடீர்னு ஒசந்துட்டதால இந்த வருடம் நாற்பதாயிரம் பேரை கம்மியா மொறவாசல் பண்ண அனுப்பி இருக்கோம்...‌ஆனா சப்பை மூக்கு காரனால முடியல... எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்காவாதான் இருக்கும்... அக்காங்...


Raj
டிச 11, 2024 05:33

துப்பாக்கி கலாச்சாரமுள்ள அமெரிக்காவில் மாணவர்கள் படிக்க போகாமல் இருப்பது தான் நல்லது.


iyer folsom
டிச 11, 2024 05:33

நிறைய மாணவர்கள் பொய் தகவல் கொடுத்து வருவதால் விசா கிடைப்பது இல்லை


சமீபத்திய செய்தி