உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரம்ஜானை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்; சிரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ரம்ஜானை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்; சிரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரம்ஜான் விடுமுறை காலத்தில் சிரியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினர் உடனடியாக சிரியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட, கோயாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிரியாவில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை சமயத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள், பொது நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து, வெளிநாட்டினர் சிரியாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்த சமயம், சிரியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம். பயங்கரவாதம், உள்நாட்டு அமைதியின்மை, கடத்தல், பணயக்கைதிகள் பிடிப்பு, ஆயுத மோதல்கள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சிரியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால், 0969-333644, +963-969-333644 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R. SUKUMAR CHEZHIAN
மார் 29, 2025 22:42

America will Shave Syria, colourful advance ramzan wishes.


ஆரூர் ரங்
மார் 29, 2025 21:29

பெரிய பட்டாசு வெடித்து தான் பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். சிறிய பட்டாசுகள் வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும்தான்.


Pandi Muni
மார் 29, 2025 21:54

எப்படியோ வெடிச்சி வெடிச்சி செத்து ஒழிஞ்சானுங்கன்னாலே போதும்


புதிய வீடியோ