உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: ''ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதித்தது சரியான யோசனை,'' என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லை . இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். இதில் 25 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதம் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா தெரிவித்திருந்தது. மேலும், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது, அமெரிக்காவின் வரி விதிப்பு யோசனை சரியானது தான். ஐரோப்பிய நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல. ரஷ்ய அதிபர் புடின் மீது கூடுதல் அழுத்தம் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில ஐரோப்பிய நாடுகள், தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குகின்றன; இது நியாயமில்லை.ரஷ்யாவிடம் இருந்து எந்த வகையான எரிபொருளையும் வாங்குவதை நாம் நிறுத்த வேண்டும். ரஷ்யாவுடன் தொ டர்ந்து ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் மீது, வரிகளை விதிப்பது சரியான யோசனை. கொலையாளியை நிறுத்துவதற்கான ஒரே ஒரு வழி இதுதான். எதிராளிகளின் ஆயுதத்தை பறிப்பதுதான் சரி; எரிசக்தி தான் அவர்களுடைய ஆயுதம். என் நா டு ஏவுகணைகளால் சூழப்பட்டிருக்கும் போது, போர் நிறுத்தம் குறித்து பேச நான் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்ல முடியாது; அது சாத்தியமற்றது. வேண்டுமானால், ரஷ்ய அதிபர் புடின், எங்களுடைய தலைநகர் கீவ்க்கு வரலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் போர் நிறுத்தம் குறித்து நடத்திய பேச்சினால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதற்கு மாறாக ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலுவான பதிலை நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAJ
செப் 09, 2025 07:52

நீ ஒழிந்தால்தான் உக்ரைன் பிழைக்கும்... கண்டிப்பாக நடக்கும்...


duruvasar
செப் 09, 2025 07:39

உனுக்கென்னப்பா நீ ..... என்ன வேணுமானாலும் பேசலாம். பேசிட்டுபோ


TAMILKUMARAN
செப் 09, 2025 07:27

மகனே இந்தியா மனது வைத்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்....


Priyan Vadanad
செப் 09, 2025 07:53

சீரியஸா காட்சி போய்கிட்டு இருக்கிறச்சே சும்மா ஜோக்கடிக்காதீங்க


பேசும் தமிழன்
செப் 09, 2025 07:20

ரஷ்யா கூட்டமைப்பில் இருந்து பிரிந்து.. பின்பு எதிரி நாடுகளின் பேச்சை கேட்டு கொண்டு .....தாய்நாட்டுக்கு எதிராக செயல்பட துணிந்த உங்கள் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது மிகவும் சரியே.. அதுமட்டுமல்லாமல் உக்ரைன் நாடு முழுவதும் எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான நிலையை எடுத்து வந்து இருக்கிறது ....பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து வந்து இருக்கிறார்கள்.. அதனால் உக்ரைன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன ???


Arul
செப் 09, 2025 07:20

இவன் ஒரு கோமாளி என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபிக்கிறார்


Raj
செப் 09, 2025 07:09

நீ ஜெலன்ஸ்கி அல்ல ஜெலசி.


Moorthy
செப் 09, 2025 06:59

காமெடியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை