உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்கள்; கள்ளச் சந்தையில் பயங்கரவாதிகளுக்கு விற்பனை

அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்கள்; கள்ளச் சந்தையில் பயங்கரவாதிகளுக்கு விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் விட்டுச் சென்ற அதிநவீன ஆயுதங்கள், கள்ளச் சந்தையில் பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்யப்படுவது அம்பலம் ஆகியுள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பங்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு தலிபான் முன்னேறிய வேளையில், ​​ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிலர் சரணடைந்தனர். மற்றவர்கள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுடன் தப்பிச் சென்றனர்.அதேபோல், ஆப்கனை விட்டு வெளியேறிய அமெரிக்க ராணுவமும் ஆயுதங்கள் அதிநவீன ராணுவ உபகரணங்களை அங்கேயே விட்டுச் சென்றது. தற்போது ராணுவ உபகரணங்கள் மற்றும் பாதி ஆயுதங்கள் காணாமல் போகி உள்ளது தெரியவந்தது. இந்நிலையில், அமெரிக்க படையினர் விட்டுச் சென்ற அதிநவீன ஆயுதங்கள், கள்ளச் சந்தையில் பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்யப்படுவது அம்பலம் ஆகியுள்ளது.நவீன துப்பாக்கிகள், இலகுரக ஆயுதங்கள் தான் இவற்றில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆயுதங்களை கைப்பற்றிய தலிபான் படையினரும், வேறு சில கிளர்ச்சி படையினரும், அவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.கவச வாகனங்கள், ஹெலிகாப்டர் போன்றவை தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர்கள் இல்லாத காரணத்தால், பயன்படுத்த முடியாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை மீட்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் அவ்வப்போது குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாதுகாக்கிறோம்

ஆயுத விற்பனை குறித்து தாலிபன் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா கூறியதாவது: அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் நவீன ராணுவ உபகரணங்களை நாங்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கிறோம். ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும், காணாமல் போவதாகவும் கூறுவது தவறானது. அனைத்து இலகுரக மற்றும் கனரக ஆயுதங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sampath Kumar
ஏப் 18, 2025 16:49

யாரு அந்த கள்ள சந்தை காரன் அதை ஏன் சொல்லவில்லை ? கல்லா காட்டும் அரசியில் வியாதிகளின் கைக்கூலிகள் தான் கள்ள சந்திக்காரர்கள் பேரும் பாலும் கசோக்கி தொடங்கி ஹர்சத் மேத்தா வர்க்கங்கள் அடக்கம்


djivagane
ஏப் 18, 2025 11:59

உக்ரைனுக்கு கொடுத்த ஆயுத்தம் எல்லாம் இப்பெடிதான் கள்ளச் சந்தையில் விற்பனை ஆகும்


Barakat Ali
ஏப் 18, 2025 10:13

பொறுப்பற்ற நாடு அமெரிக்கா .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை