உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்

ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர், சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்து வருகிறார். இந்த சூழலில் தற்போது ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படுகிறது. மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுபவரை ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு பாதுகாத்து வருகிறது. யுனெஸ்கோ அமைப்பும் தொடர்ந்து யூத விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது என கூறி, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகின. அப்போது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தார். பின்னர், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, மனித உரிமைகள் கவுன்சிலியில் கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவை மீண்டும் இணைத்தார்.இந்த சூழலில் தற்போது அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் டிரம்ப் இறங்கி உள்ளார். அந்த வகையில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Subburamu Krishnasamy
பிப் 06, 2025 15:07

USA is moving in right direction. They are following nation first policy. Nothing wrong in their policy


Saai Sundharamurthy AVK
பிப் 06, 2025 12:17

ஐ.நா மனித உரிமை என்கிற பெயரில் உலக நாடுகளில் பல அட்டூழியங்களை அது செய்து வருகிறது. நிதியுதவி நிறுத்தியது சரியே !!


GoK
பிப் 06, 2025 12:15

அமெரிக்கா அதுக்கு வருடாந்திரம் சுமார் 16000 கோடி ரூபாய் கொடுத்து வந்தது. வேலையில்லாத பணமுறுஞ்சிகள் சுக வாழ்வு கண்டு வந்தார்கள் அதில்.... இப்போது தெரியும்.


Sundar R
பிப் 06, 2025 11:22

ஐநா மனித உரிமை கவுன்சில் சரியான முறையில் நடைபெறுகிறது என்றால், 1950 முதல் கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிடர்கள், திமுக போன்ற கட்சியினர் ஆகியோர் பொதுவெளியிலும், மீடியாக்களிலும், திரைப்படங்களிலும் உதாரணம்: BAD GIRL பிராமணர்களை இழிவுபடுத்தும் செயலை செய்து வருகிறார்கள். இந்த திராவிடர்களின் அட்டூழியங்கள் சில மாதங்களுக்கு முன்பு உச்சக்கட்டம் அடைந்து நம் மத்திய அரசின் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை OORUGAAI MAAMI என்று கேலியும், கிண்டலுமாக பொதுவெளியில் பேசினார்கள். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு இந்த இழிநிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட திராவிடர்களை தண்டிப்பதற்கு சட்டம் இருக்கிறது. ஆனால், இந்த சிறுபான்மை சமுதாயத்தினரான பிராமணர்களை திராவிடர்கள் இழிவு செய்தால், சம்பந்தப்பட்ட திராவிடர்களை தண்டிப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தமிழ்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் தலைமையில் பெரிய ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து நடைபவனியும் நடைபெற்றது. பிராமணர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சட்டம் வரவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பிராமணர்களும் ஐநா மனித உரிமை கவுன்சிலைத் தொடர்பு கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிற சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியோரால் பிராமணர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எங்கள் பிராமண சமூகத்தினரை, பொதுவெளி, மீடியா மற்றும் சினிமா ஆகிவற்றின் மூலம் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத திராவிடர்கள் கடந்த 75 ஆண்டுகளாக வன்கொடுமை செய்வது, பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தும், திராவிடர்களைக் கண்டித்து இப்பிரச்சினையை நிறுத்தவில்லை.


MP.K
பிப் 06, 2025 13:30

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிராமண மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே இடத்தில பார்த்த தங்களை பார்த்துகிறேன். எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


Ganapathy
பிப் 06, 2025 11:21

காஷ்மீர்ல பண்டிட்டுகள் விஷயத்துல ஐநா மனித உரிமை சபை ஆற்றாத சேவைக்காக நாமளும் விலகணும். காச மிச்சப்படுத்துத்தலாம்


Rajathi Rajan
பிப் 06, 2025 10:49

மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகினால் தானே மனித உரிமைகள் மீறலில் ஈடுபடமுடியும் அவரது நண்பனை போல?


Rajasekar Jayaraman
பிப் 06, 2025 09:47

அந்த கவுசிலே மதமாற்ற கும்பளுக்கானதே அந்த ஆணி மனித குலத்துக்கு தேவையற்ற துருபிடித்த ஆணி.


முக்கிய வீடியோ