உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛போரை நிறுத்த ரஷ்யா உடனான உறவை பயன்படுத்துங்கள்: இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

‛போரை நிறுத்த ரஷ்யா உடனான உறவை பயன்படுத்துங்கள்: இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'போரை நிறுத்துவதற்கு ரஷ்யா உடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும்' என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கரெட் மேக்லியோட் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: உக்ரைன்- ரஷ்யா இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. போரை நிறுத்துவதற்கு ரஷ்யா உடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். இதனை அனைத்து நாடுகளும் உணர வேண்டியது அவசியம். போருக்கு எதிராக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா இந்த சிறப்பு கூட்டாண்மையைப் பயன்படுத்த விரும்புகிறோம். குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. உக்ரைனில் ரஷ்யாவின் போர் ஐ.நா சாசனத்தை மீறுவதாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Barakat Ali
ஜூலை 11, 2024 09:50

அமெரிக்கா செலன்ஸ்கிக்கு "நாங்க உனக்கு சப்போர்ட்டு" ன்னு தப்பான வாக்குறுதி கொடுத்து உக்ரைனையே மயான பூமி ஆக்கிட்டு பேச்சைப்பாரு ....


மோடிதாசன்
ஜூலை 10, 2024 23:06

சுதந்திர இந்தியாவில் இது வரைக்கும் இப்படி நிகழ்வு நடந்தது உன்டா? அதாவது அமெரிக்கா கேட்கிறது இந்தியாவை போரை நிறுத்த உதவி பன்னுங்கள் என்று இதெல்லாம் எப்படி? ஒரே காரணம் பிஜேபி மற்றும் மோடிஜியின் தன்னலமற்ற நேர்மையான சேயல்பாடுகள். காசு வாங்கிக்கொண்டு, போராடி பெற்ற சுதந்திரத்தை விற்கும் கூட்டத்திற்கு இதெல்லாம் உனர வாய்ப்பில்லை.


Barakat Ali
ஜூலை 11, 2024 10:35

அமெரிக்கா இதில் இந்தியாவையும் இழுத்துப்போட முயல்கிறது ........


Cheran Elumalai
ஜூலை 10, 2024 22:55

ஐநா-வில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க முடியவில்லை ஆனால் இவர்கள் சொல்வதை மட்டும் நாம் கேட்க வேண்டுமாம்.


லால்பாஷா
ஜூலை 10, 2024 19:32

நாங்க என்ன வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம். போரை நிறுத்தலாம்னுதான் போனோம். ஒரு மெடலை குத்தி அனுப்பிச்சுட்டான்க.


பேசும் தமிழன்
ஜூலை 10, 2024 18:55

அப்போ எதுக்கு உக்ரைன் அதிபராக இருக்கும் காமெடி நடிகர் தேவையில்லாமல்.... ஊளையிடுகிறார்.


தத்வமசி
ஜூலை 10, 2024 18:20

உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தினாலே இந்த போர் நின்று விடும். அமெரிக்காவின் சொந்த லாபத்திற்காக நடக்கும் இந்த போர் தேவையற்றது. அமெரிக்காவும் மற்ற நாடுகளும் துணை இருக்கும் தைரியத்தில் தான் உக்ரைன் சண்டை போடுகிறது.


Naviran
ஜூலை 10, 2024 17:11

நீங்கள் ஏன் பாக்கிஸ்தா னிடம் இதை செய்யக்கூடாது


Senthoora
ஜூலை 10, 2024 16:20

என்று பொருளாதார சிக்கலில் மாட்டி சின்னாபின்னமா அமேரிக்கா வருகுதுதோ அன்றுதான் உலக நாடுகளுக்கு அமைதி.


hari
ஜூலை 10, 2024 18:47

ஏலே முட்டு.....இங்கே மறுபடியும் கள்ளசாராயம்....... கொஞ்சம் இந்த பக்கம் வரியா....


Amsi Ramesh
ஜூலை 10, 2024 15:26

அதை சொல்ல நீ யாரு


Srinivasan Krishnamoorthi
ஜூலை 10, 2024 15:15

உக்ரைனுக்கு அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் இவை ஆயுதம் கொடுத்து விட்டு இந்தியாவை ரஷ்யாவுக்கு போர் நிறுத்த அறிவுரை கூறுவது அறிவிலி செயல்


மேலும் செய்திகள்