உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகிய விவேக் ராமசாமி

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகிய விவேக் ராமசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், முன்னாள் அதிபர் டிரம்புக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. முன்னதாக, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும், 'காகஸ்' எனப்படும் மாகாண அளவிலான உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். பாரம்பரியமாக, அயோவா மாகாணத்தில் இருந்து, இந்த தேர்தல் துவங்கும். இந்தாண்டுக்கான காகஸ் தேர்தல், குடியரசு கட்சியில் நேற்று (ஜன.,15) நடைபெற்றது.குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவரை எதிர்த்து, இந்திய வம்சாவளிகளான, ஐ.நா.,வுக்கான முன்னாள் துாதர் நிக்கி ஹாலே, தொழிலதிபரான விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களம் இறங்கியுள்ளனர். அயோவா தேர்தலில் 51.9 சதவீத ஓட்டுகளுடன் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ப்ளோரிடா கவர்னர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத ஓட்டுகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறார். தெற்கு கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி 19 சதவீத ஓட்டுகளுடன் 3ம் இடமும், விவேக் ராமசாமி 7.7 சதவீத ஓட்டுகளுடன் 4ம் இடமும் பெற்றனர்.இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், இந்த அறிவிப்பை விவேக் ராமசாமி வெளியிட்டுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவு தருவதாகவும் அறிவித்துள்ளார். 38 வயதான இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்; தற்போது தொழில்முனைவோராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

sankaranarayanan
ஜன 16, 2024 22:42

அமெரிக்காவிலும் ஒரு இராமசாமியா என்னடாஇது உலகெமெங்கும் மோடி பிரதமரா இருக்கும்போது மக்கள் இராமசாமி கூட்டமாகவே இருக்கின்றதே


ஆரூர் ரங்
ஜன 16, 2024 17:13

ராமசாமியை வடக்குப்பட்டி அழைக்கிறது. ????விட்ட சவடால் கொஞ்ச நஞ்ச மில்லை


sankar
ஜன 16, 2024 18:00

நல்ல ஜோக் . அமெரிக்காவில் போட்டி போட பண பலம் அதிகம் வேண்டும் உங்கள் ஒட்டு சதவிகிதம் மூலம் தான் நிதி திரட்டி போட்டி போடமுடியும் . மேலும் ஒரு கட்சியில் இருந்து ஒருவர்தான் அதிபர் தேர்தலில் போட்டி போடா முடியும் விவேக் இவ்வளவு தூரம் வந்தாந்த்தே சாதனைதான்


முருகன்
ஜன 16, 2024 16:23

நன்றி .இதை வைத்து இங்கே உருட்ட நினைத்த அனைவருக்கும் அதிர்ச்சி


nizamudin
ஜன 16, 2024 14:42

உட்கார இடம்கொடுத்தால் படுக்க இடம் தேவை


Rajagopal
ஜன 16, 2024 19:53

இஸ்லாமியர்களைத்தானே சொல்கிறாய்? எங்கு போனாலும் வாகனங்கள் போக ரோடு போட்டால் அதில் போய் துண்டு விரித்து தொழுகை நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். பிறகு ஒரு மஜர் வருகிறது. கொஞ்ச நாளில் ஆயிரம் பேர் தொழுகை செய்ய தொடங்குகிறார்கள். இப்படி ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்து, உள்ளே இருப்பவர்களை விரட்டி, எல்லாவற்றையும் ஆக்கிரமித்து, கூடாரத்தையே கீழே கொண்டு வருவது போல உலகமெல்லாம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் நாடுகளின் சட்டங்களை மதிப்பதில்லை. விவேக் போன்றவர்கள், அமெரிக்காவின் சட்டங்களை மதித்து, வரிகள் கட்டி, கடினமாக உழைத்து, பணம் சம்பாதித்து, அவர்கள் வாழும் நாட்டின் நலனுக்காக உழைக்கிறார்கள். ரோடுகளை அபகரிக்கும் மனிதர்களுக்கு இதெல்லாம் புரியாது.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 16, 2024 20:44

நிசாமுதீன், கத்திக்கு பயந்து மதம் மாறிய உங்கள் கூட்டத்தின் பங்களிப்பு நாட்டின் முன்னேற்றத்தில், மக்கள் தொகை அதிகரித்தது தவிர வேறு ஏதாவது உண்டா? ஹிந்துக்களின் வரி பணத்தில் உண்டு வயிறு வளர்த்து திரும்பி ஹிந்துக்களையே குண்டு வைத்து கொலை செய்யும் பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுத்ததே தப்பு, வாயை கொடுத்து வாங்கிக்கொள்வது என்பது இதுதான். மோகன்தாஸ் காந்தி செய்த குளறுபடியால் தான் நீங்கள் இங்கே நன்றாக சாப்பிட்டு கொழுத்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்கிறீர்கள், இல்லையென்றால் பாகிஸ்தானில் கோதுமைக்கு பிச்சையெடுத்து கொண்டிருக்கவேண்டும். புரிந்து கொள்ளுங்கள், அடுத்த தலைமுறையையாவது தேசபக்தியுடன் இருக்க விடுங்கள்.


babu
ஜன 16, 2024 13:04

ஓவரா பேசும் போதே தெரியும் நீயும் வடை பார்ட்டி தாணு


Velan Iyengaar
ஜன 16, 2024 14:23

எப்போ ஜகா வாங்கணும் என்று ரொம்போ நல்ல கற்று கொடுத்திருக்காங்க


Velan Iyengaar
ஜன 16, 2024 12:42

ஜெயிக்க முடியாது என்று தெரிந்த பின் செலவு செய்வதை தவிர்த்திருக்கிறார்.... அவர்களுக்கே உரிய சாமர்த்தியம் இது புலம் பெயர் இந்திய வம்சாவளியினனாக இருந்தாலும் புலம் பெயர் இந்தியர்களின் விசா கொள்கையில் இந்தியர்களுக்கு எதிரான நிலை எடுத்த நல்ல பரந்த மனசுக்காரன்


Sridhar
ஜன 16, 2024 12:41

தோல்விதான் வெற்றியின் முதல் படி. அடுத்த தேர்தலில் வெற்றி நிச்சயம்.


Rpalnivelu
ஜன 16, 2024 11:42

டொனால்ட் டிரம்ப் அதிபரானால் அமெரிக்கா உயர்வுறும். அமெரிக்கா இந்திய உறவு புதிய உச்சத்தை தொடும். உக்ரைன் போர் முடிவுறும். மத்திய கிழக்கு அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருக்கும். சீன கொழுப்பு அடக்கப்படும்


A1Suresh
ஜன 16, 2024 11:31

மகிழ்ச்சி


மேலும் செய்திகள்







புதிய வீடியோ